India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தருமபுரி தொகுதியில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 49,705 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். திமுக வேட்பாளர் மணி 31,802 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் அசோகன் 28,740 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 17 இடங்களிலும் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திரிணாமுல் காங்கிரஸ் அங்கு படுதோல்வி அடையும் எனக் கணித்திருந்த நிலையில், தற்போது அக்கட்சி முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக்கின் ஆளும் பிஜு ஜனதா தளம் சரிவை சந்தித்து வருகிறது. தற்போது வரை பாஜக 50 இடங்களிலும், பிஜு ஜனதா 30 இடங்களிலும், காங்., 6 இடங்களிலும், சிபிஎம் 1 இடத்திலும், சுயேச்சை 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன. ஆட்சியமைக்க 74 இடங்கள் தேவைப்படும் நிலையில், சிறிது நேரத்தில் யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பது தெரிந்துவிடும்.
பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், அமைச்சர் கே.என்.நேருவின் மகனுமான அருண் நேரு, 33,687 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 12,396 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக சின்னத்தில் போட்டியிட்ட பாரிவேந்தர் 9,023 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் தேன்மொழி 6,811 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 29 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் அங்கு ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அரக்கோணம் தொகுதியில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 32,106 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் விஜயன் 16,701 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாமக வேட்பாளர் விஜயன் 11,184 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
புதுச்சேரியில் பாஜக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் 2,500க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். காங்கிரஸ் 32,647, பாஜக 29,853, நாதக 1,976, அதிமுக 1,486 வாக்குகள் பெற்றுள்ளன. இதில், கவனிக்கத்தக்க வேண்டியது நாம் தமிழரை விட அதிமுக குறைவான வாக்குகள் வாங்கி, 4வது இடத்தில் உள்ளது.
நாமக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தமிழ் மணி 29,760 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து, திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 22,632 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 3,452 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் கனிமொழி 2,509 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
காஷ்மீர் & லடாக்கில் உள்ள 5 தொகுதிகளில் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, சஜத் லோன் ஆகிய 3 முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட 66 பேர் போட்டியிட்டுள்ளனர். 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்த அங்கு தற்போது 3 அடுக்கு பாதுகாப்புடன் இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டப் பின், 5 ஆண்டுகள் கழித்து யூனியன் பிரதேசமாக 2024 மக்களவைத் தேர்தலைச் சந்தித்துள்ளது. பிரிக்கப்பட்ட காஷ்மீர் (பாரமுல்லா, ஸ்ரீநகர், ரஜோரி) & லடாக்கில் (ஜம்மு, உதம்பூர்) 5 தொகுதிகளில் 1989-க்குப் பிறகு முதல் முறையாக 50%க்கு அதிகமான வாக்குப்பதிவு நடந்திருந்தது. தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக காஷ்மீரிகள் இத்தேர்தலைக் கருதுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.