News May 7, 2024

இன்று மூன்றாவது கட்டத் தேர்தல்

image

நாடு முழுவதும் இரண்டு கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் இன்று காலை 7 மணிக்கு மூன்றாவது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் கர்நாடகா, குஜராத் உள்பட 12 மாநிலங்களைச் சேர்ந்த 93 தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பாலான தொகுதிகள் பாஜக வசம் உள்ளன. அதுமட்டுமின்றி பிரதமர் மோடி சொந்த மாநிலமான குஜராத்தில் தேர்தல் நடைபெறுவதால் இன்றைய தேர்தல் பாஜகவிற்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

News May 7, 2024

12 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் சதம்

image

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 51 பந்துகளை எதிர்கொண்ட மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் 101* ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடித்து வாணவேடிக்கை காட்டினார். இவரது அதிரடியால் மும்பை அணி 17.2 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் சதம் அடித்த SKY, மும்பை அணிக்காக அதிக சதங்கள் (2) அடித்த வீரர் என்ற ரோஹித்தின் சாதனையை சமன் செய்தார்.

News May 7, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

* நாடு முழுவதும் மூன்றாம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
* பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
* ஹமாஸ் – இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
* Deepfake வீடியோ மூலம் பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
* டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம்.

News May 7, 2024

தமன்னாவின் நடிப்பைப் பாராட்டிய விஜய் வர்மா

image

சுந்தர்.சி இயக்கி, நடித்துள்ள ‘அரண்மனை-4’ படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இப்படத்தில் நாயகிகளாக தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், தமன்னாவின் நடிப்பில் பலராலும் பாராட்டப்படுகிறது. இந்நிலையில், தமன்னாவின் காதலர் விஜய் வர்மா அவரைப் பாராட்டி, அரண்மனை 4-ல் உங்களுக்கு கிடைத்த வரவேற்புக்கு வாழ்த்துகள் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News May 7, 2024

நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ஆக வாருங்கள்

image

+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, உங்கள் முன் மேற்படிப்புக்காக வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதிலும் வெற்றிபெற்று நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ஆகலாம் வாருங்கள் என வாழ்த்தியுள்ளார். மேலும், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, உங்களுக்கான வெற்றிகள் அடுத்தடுத்துக் காத்திருக்கின்றன என தைரியம் அளித்துள்ளார்.

News May 7, 2024

முடிவுக்கு வரும் ஹமாஸ் – இஸ்ரேல் போர்?

image

பல மாதங்களாக நீடித்து வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது. கத்தார் பிரதமர், எகிப்து உள்துறை அமைச்சரிடம் தொலைபேசி வாயிலாக ஒப்புதல் அளித்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதற்காக ஹமாஸ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஹமாஸ் படையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போர் நிறுத்தப் பரிந்துரையை இஸ்ரேல் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News May 7, 2024

ராஜஸ்தானை சமாளிக்குமா டெல்லி கேபிடல்ஸ்?

image

டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் 56ஆவது ஐபிஎல் போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் வெற்றிபெற்று பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேநேரம், 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிபெற்றுள்ள டெல்லி அணி 6ஆவது இடத்தில் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்? என கமெண்ட் பண்ணுங்க.

News May 7, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶மே – 7, சித்திரை – 24 ▶கிழமை – செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:00 AM – 8:30 AM, 4:00 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM, 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை நேரம்: 12:00 PM – 1:30 PM ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶திதி: அமாவாசை

News May 7, 2024

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தை புகழ்ந்த ராஷி கண்ணா

image

கடந்த பிப்ரவரியில் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் உலகம் முழுவதும் ₹200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து கடந்த 5ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாகி அதிலும் பல சாதனைகள் படைத்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தை புகழ்ந்து நடிகை ராஷி கண்ணா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “இப்படம் ஒரு ரத்தினம். இப்படம் பெறும் பாராட்டுக்களுக்கு உண்மையாகவே தகுதியானது” எனப் புகழ்ந்துள்ளார்.

News May 7, 2024

இந்தியாவை சூப்பர் பவர் கொண்ட நாடாக மாற்றுவோம்

image

2027க்குள் இந்திய உலகின் 3ஆவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என உலகளாவிய நிறுவனங்கள் பேசிவருவதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 2014 வரை காங்., ஆட்சி செய்தபோது பொருளாதாரத்தில் 11ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5ஆவது இடத்தில் இருப்பதாகக் பெருமிதம் தெரிவித்தார். மேலும், இந்தியாவை சூப்பர் பவர் கொண்ட நாடாக மாற்ற விரும்புவதாகக் கூறினார்.

error: Content is protected !!