India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த MI, நேற்று SRH-ஐ வீழ்த்தியதன் மூலம் ஒரு இடம் முன்னேறியுள்ளது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள MI, 4 போட்டிகளில் வெற்றியும், 8 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இருப்பினும் அந்த அணிக்கு ப்ளே ஆஃப்-க்கு செல்ல வாய்ப்பு மிகவும் குறைவு. அதேபோல், GT 11 போட்டிகளில் 4இல் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
தேசிய பங்குச்சந்தையான NSEஇல் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் (FPI) விகிதம், 11 ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிந்துள்ளது. மார்ச் 2024 நிலவரப்படி, தேசிய பங்குச் சந்தையில் உள்ள நிறுவனங்களின் 17.68% பங்குகள் FPI வசம் உள்ளது. இது அதிகபட்சமாக டிசம்பர் 2020இல் 21.21%ஆக இருந்தது. அதேநேரம், உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு கணிசமாக உயர்ந்து 16.05%ஆக அதிகரித்துள்ளது.
நீலகிரி, கொடைக்கானலுக்கு செல்வோர் கட்டாயம் இ-பாஸ் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சோதனைச் சாவடிகளில் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே சுற்றுலாப் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இ-பாஸ் நடைமுறை இன்று முதல் ஜூன் 30 வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீலகிரி செல்வதற்காக இதுவரை 21,446 வாகனங்களுக்கு இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடலூர் காட்டுமன்னார்கோயில் மேலக்கடம்பூரில் உள்ளது ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயம். கயிலை மலைக்குச் சென்று வழிபட்ட தேவர்களும் சித்தர்களும் கடம்பூர் கோயிலும் கயிலைக்கு நிகரானது என்று கருதி இங்கு வழிபாடு செய்துள்ளனர். இந்த ஆலயத்தின் சிறப்பே பிரதோஷ மூர்த்திதான். இங்குள்ள அமிர்தகடேசுவரர் ஆயுள் பலம் தருபவர் என்பதால் இங்கு சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், திருமணம் செய்தால் ஆயுளும் ஆரோக்கியமும் கூடும் என்பர்.
+2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவன் சின்னத்துரையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து கூறினார். சென்னைக்கு படிக்க வருமாறு அழைத்ததாகவும், நெல்லையிலேயே படிக்க விரும்புவதாக மாணவன் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், தனக்கு நேர்ந்த இழிவுகளையும் தாக்குதல்களையும் தனது சாதனையின் மூலம் திருப்பித் தாக்கியுள்ளதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.
பிரபல காமெடி நடிகர் கிங்காங் மூத்த மகள் சக்தி பிரியா +2 தேர்வு எழுதி இருந்த நிலையில், அவர் 600க்கு 404 மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடிய பின் கிங்காங் கூறுகையில், “எனது மகள் எங்களைப் பெருமைப்படச் செய்துள்ளார். அவளின் கனவை நிறைவேற்றுவதுதான் எங்களின் விருப்பம். கல்லூரியில் அவருக்கு பிடித்த படிப்பை படிக்க வைப்போம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு எதிராக, மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கள் பொருளாதாரம் சுற்றுலாவைச் சார்ந்துள்ளதாகக் கூறிய மாலத்தீவு சுற்றுலா அமைச்சர் இப்ராஹிம் ஃபைசல், தங்களை ஆதரிக்குமாறு இந்தியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், புதிய அரசு இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
‘டாடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கவின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஸ்டார்’. இளன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் மே 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்திற்கு சென்சார் போர்டு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3712 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 12 – 27 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியிடத்தை பொறுத்து ஊதியம் ரூ.20,000 – 80,000 வரை வழங்கப்படும். இதற்கு <
கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், வட உள் மாவட்டங்களான சேலம், காஞ்சிபுரம், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மே 10ஆம் தேதி வரை வெப்பநிலை 4 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது..
Sorry, no posts matched your criteria.