News July 9, 2025

ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழிகள்

image

*நான் மெதுவாக நடப்பவன், ஆனால் ஒருபோதும் பின்னோக்கி நடப்பதில்லை.*நீங்கள் ஒருவரின் குணத்தை சோதித்துப் பார்க்க வேண்டுமானால் அவரிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்.*வெற்றிகரமான பொய்யராக வருமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான நினைவாற்றல் கிடையாது. *இன்றைய தவிர்ப்பின் மூலம் உங்களால் நாளைய பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது. *எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.

News July 9, 2025

பும்ராவுக்கு போட்டியாக ஆர்ச்சரை களமிறக்க வாய்ப்பு

image

இந்தியா – இங்கி., எதிரான 3வது டெஸ்ட் போட்டி நாளை துவங்குகிறது. இந்திய அணியில் பும்ரா இணைவார் என தகவல்கள் உள்ளன. அதைப்போன்று இந்திய அணிக்கு செக் வைக்கும் வகையில் இங்கி., அணியில் ஆர்ச்சரை களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆர்ச்சர் நல்ல உடற்தகுதியுடன் தயாராக இருப்பதாக இங்கி., பயிற்சியாளர் மெக்கல்லமும் தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

திருமாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்: இபிஎஸ் சாடல்

image

அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்திருந்தார். இதுபற்றி பேசிய இபிஎஸ், அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை என திருமா கண்டுபிடித்துவிட்டாரா? டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என்றார். எங்களுக்கும் கூட்டணி கட்சிக்கும் விளக்கம் சொல்வதற்கு அவர் யார்? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் NDA கூட்டணிக்கு இபிஎஸ் தான் தலைவர் என அமித்ஷா கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.

News July 9, 2025

நான் கைதாகவில்லை: சௌபின் சாஹிர் விளக்கம்

image

மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்புக்கு ₹7 கோடியை கடனாக பெற்றுக்கொண்டு அசல் தொகையோ, 40% லாபத்தையோ <<16994564>>சௌபின் சாஹிர்<<>> தராததால் அவர் கைதாகி சொந்த ஜாமினில் வெளிவந்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய சௌபின் சாஹிர், தன்னை யாரும் கைது செய்யவில்லை என்றும், தன் பக்கம் நியாயங்களை உணர்த்தும் வகையிலான அனைத்து ஆவணங்களையும் காவல்துறை, நீதிமன்றத்திடம் சமர்த்திருக்கிறேன், விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்றார்.

News July 9, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶ இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 390 ▶குறள்: கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி. ▶ பொருள்: கொடுத்தலும், முகமலர்ந்து பேசுதலும், முறைசெய்தலும், குடிகளைக் காத்தலும் ஆகிய இந்நான்கும் உடையவன் வேந்தர்களுக்கெல்லாம் விளக்காவான்.

News July 9, 2025

’ஆந்திராவில் காவி வேஷ்டி, தமிழ்நாட்டில் பச்சை வேஷ்டி’

image

பவன் கல்யாணுக்கு பைத்தியம் பிடித்திருப்பதாக ஆந்திரா முன்னாள் அமைச்சர் ரோஜா விமர்சித்துள்ளார். அண்மையில் மதுரையில் நடைபெற்ற முருகன் பக்தர்கள் மாநாட்டில் பவன்கல்யாண் பங்கேற்றிருந்தார். இது தொடர்பாக பேசிய ரோஜா, ஆந்திரா வந்தால் காவி வேஷ்டி, தமிழ்நாட்டுக்கு சென்றால் பச்சை வேஷ்டி அவர் உடுத்திக் கொள்வதாகவும், திடீர் திடீரென இந்த பக்தர், அந்த பக்தர் என்றெல்லாம் அவர் பேசுவதாகவும் தெரிவித்தார்.

News July 9, 2025

3வது டெஸ்டில் பும்ரா களமிறங்குவாரா?

image

இந்தியா- இங்கி., இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2-வது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், நாளை தொடங்கும் லார்ட்ஸ் டெஸ்டில் பும்ரா விளையாடுவார் என்றும், பெருமைமிக்க லார்ட்ஸ் மைதான போர்டில் தனது பெயரை பதிக்க விரும்புவார் என இங்கி., முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

அகமதாபாத் விமான விபத்து: முதல் கட்ட அறிக்கை தாக்கல்

image

அகமதாபாத் விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இக்குழுவினர் முதல் கட்ட அறிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

News July 9, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூலை 9 – ஆனி 25 ▶ கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶ எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶ குளிகை: 10:30 AM – 12:00 PM ▶ திதி: சதுர்தசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: வளர்பிறை.

News July 9, 2025

விமான இன்ஜினில் சிக்கிய ஒருவர் பலி

image

இத்தாலியில் விமானத்தின் இன்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மிலன் நகரில் பெர்கமோ விமான நிலையத்தில் விமானம் ஓடுதளத்தில் புறப்படத் தயாராக இருந்த போது அதனருகே ஓடிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் இன்ஜினில் உள்ளிழுக்கப்பட்டுள்ளார். இந்த அசம்பாவிதம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் விமான நிலையத்தில் 9 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

error: Content is protected !!