India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
+2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இன்று முதல் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதற்கு 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். நகல் பெற்றவர்களுக்கு மட்டுமே மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்று இன்றோடு 3 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதில், மகளிர் உதவித் தொகை, காலை உணவுத் திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து, நான் முதல்வன் திட்டம் ஆகியவை மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன. அதேநேரம், போதைப் பொருட்கள் அதிகரிப்பு, நீட் தேர்வு, சட்ட ஒழுங்கு பிரச்னை ஆகியவை கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி உள்ளன. இந்த ஆட்சிக்கு நீங்கள் தரும் ரேட்டிங் என்ன?
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தற்கொலையல்ல என உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது. எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அவரது சடலத்தின் குரல்வளை முற்றிலுமாக எரிந்துள்ளது. ஏற்கெனவே, இறந்த பிறகு உடலை எரித்தால் மட்டுமே குரல்வளை முற்றிலுமாக எரியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடற்கூராய்வு அறிக்கையின்படி, அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மாரிசெல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ‘பைசன்’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கிய நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பை நெல்லை மற்றும் சென்னையில் 60 நாள்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் கூறியுள்ளார். அத்துடன், இப்படத்தின் கதைக்களம் முழுக்க கபடியைச் சுற்றி நடக்கும் என்று கூறிய அவர், யாருடைய வாழ்க்கை வரலாறும் அல்ல, கற்பனைக் கதையே எனவும் தெரிவித்தார்.
கோடை கால உடல் சூட்டை தணிக்க, காலம் காலமாக நமது முன்னோர்கள் சாப்பிட்டு வந்த பழைய சோறு நல்ல பயன் தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். காலை வேளையில் பழைய சோறு சாப்பிடுவதன் மூலம் 80 சதவீத குடல் நோய்களைக் குணப்படுத்த முடியும் எனக் கூறுகிறார்கள். பழைய சோற்றில் நிறைய நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதாகக் கூறும் மருத்துவர்கள், அதில் ஏராளமான வைட்டமின் சத்துகளும் அடங்கியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில், 2 மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் அரசுப் பள்ளியில் பயின்ற சவுமியா என்ற மாணவி, +2 தேர்வில் வெற்றிபெற்றும், எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லை என தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அதேபோல், விருத்தாசலம் அருகே கணித பாடத்தில் தோல்வியடைந்த அபிநயா என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் செய்தியுடன் மாணவர்களின் தற்கொலை செய்தியும் வெளியாகிறது. உயிரை விட மதிப்பெண்களே முக்கியம் என்ற மாணவர்களின் நினைப்பே இத்தகைய செயலை செய்யத் தூண்டுகிறது. வாழ்க்கையின் வெற்றி மதிப்பெண்களை மட்டுமே வைத்து கணக்கிடப்படுவதில்லை மாணவர்களே. அதனை நீங்கள் புரிந்து கொள்வது அவசியம். பெற்றோரும் ஆசிரியர்களும் இதனை எடுத்து சொல்வதும் அவசியம்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளிநாட்டு சக்திகளால் தீர்மானிக்கப்பட்டதாக, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு பாகிஸ்தானில் இருந்து ஆதரவு கிடைப்பதாகத் தாக்குதல் தொடுத்தார். தோல்வி பயத்தில் ராகுல் காந்தி ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு ஓடுவதாக விமர்சித்த அவர், ரேபரேலியிலும் ராகுல் தோற்பது உறுதி என சூளுரைத்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடாவில் இருந்து 3ஆவது முறையாக இன்று காலை அவர் விண்வெளிக்கு செல்ல இருந்தார். இந்நிலையில், அவர் செல்ல இருந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் முன்பு அவரது பயணம் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியதில் படுகாயமடைந்த 5 வயது சிறுமி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் தலையின் மேல்பகுதி 15 அங்குலம் அளவிற்கு பெயர்ந்துள்ளதாகவும், அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.