India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் வெயில், மழையை பொருட்படுத்தாது மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 25.41% வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 27.34%, சத்தீஸ்கர் 29.90%, கோவா 30.94%, குஜராத் 24.35%, கர்நாடகா 24.48%, வாக்குகள் பதிவாகியுள்ளன.
அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரும் பேஷன் ஷோ மெட் காலா. இந்நிகழ்வினை பிரபல ஃபேஷன் இதழான Vogue நடத்துகிறது. இதில் கலந்து கொள்ள, உலகம் முழுவதிலும் இருந்து பிரபலமானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. நேற்று நடந்த இந்நிகழ்வில் பாலிவுட் நடிகை ஆலியா பட் கலந்து கொண்டார். அவர் சாப்யாஷாச்சியின் சேலையில் ஜொலித்தார்.
காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில் கைதாகி, கோவை சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை கஞ்சா வழக்கில் போலீசார் மீண்டும் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால், முன் ஜாமின் வழங்கக் கோரி, விரைவில் நீதிமன்றத்தை நாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்தவுடனே கார்பரேட் நிறுவனங்கள் பல அவர்களுக்கு வேலைவாய்ப்பு மோகம் காட்டி உள்ளிழுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மாணவர்கள் உயர் கல்வியை தவற விடுகின்றனர். 17 வயதிலேயே பணி கிடைத்துவிடுவதால் ஆர்வத்துடன் செல்லும் மாணவர்கள், 25 வயதுக்கு பின்னரே உயர்கல்வியின் அவசியத்தை உணர்கின்றனர். கல்லூரி படிப்புதான் உங்களை உயர்த்தும் மாணவர்களே. சிந்திப்பீர்.
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘பி.டி.சார்’ திரைப்படம், வரும் மே 24ஆம் தேதி வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் இப்படத்தை, ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். முழுவீச்சில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு, கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. தற்போது தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரனா நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், 2024 IPL கோப்பையை விரைவில் CSKவின் வரவேற்பறையில் காண வேண்டும் என்ற ஒரே ஆசையுடன் அணியில் இருந்து விடைபெறுவதாகவும், சென்னையிடமிருந்து தனக்குக் கிடைத்த அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுக்காக நன்றி என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சடங்குகள் இல்லாத இந்து திருமணம் செல்லாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது விவாதப் பொருளாகியுள்ளது. நீதிமன்றத்தின் கருத்தால் சுயமரியாதை திருமணங்களுக்கு சிக்கல் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்து திருமணங்களுக்கும், சுயமரியாதை திருமணங்களுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறும் சட்ட வல்லுநர்கள், சுயமரியாதை திருமணங்களுக்கு சிக்கல் இருக்காது என தெளிவுப்படுத்தியுள்ளனர்.
பிரபல மலையாள நடிகை கனகலதா (63) உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். மலையாளத்தில் ப்ரியம், அத்யதே கண்மணி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களிலும், முன்னணி நடிகர்களுடனும் நடித்த அவர், தமிழில் பிரசாந்தின் உனக்காக பிறந்தேன், பாசில் இயக்கிய கற்பூர முல்லை, சுந்தர்.சி-யின் இருட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கோடை காலங்களில் உணவில் அவசியம் முட்டையைச் சேர்க்க வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சூரிய ஒளியின் வெளிப்பாடு கண்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். அந்த நேரத்தில், முட்டையில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகிய ஆக்ஸிஜனேற்றிகள் கண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, கோடை காலத்தில் ஏற்படும் சருமப் பிரச்னையை முட்டை சரி செய்கிறது எனக் கூறுகின்றனர்.
டி20 உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சியை, இந்திய அணி நேற்று அறிமுகம் செய்தது. இன்று, அணியின் கேப்டன் ரோஹித், கோலி உள்ளிட்ட சக வீரர்கள் புதிய ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் இத்தொடர், வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.