India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரகாஷ் 1.42 லட்சம் வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 93,833 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் கார்மேகம் 25,784 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தமாக வேட்பாளர் விஜயகுமார் 20,726 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மலையரசன் 2.84 லட்சம் வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் குமரகுரு 2.54 லட்சம் வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் தேவதாஸ் உடையார் 35,897 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் ஜெகதீசன் 35,897 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் 1,81,228 வாக்குகளைப் பெற்று ‘நோட்டா’ இரண்டாம் இடம்பிடித்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி இறுதிநேரத்தில் போட்டியிலிருந்து வாபஸ் பெற்றிருந்தார். இதன் காரணமாக அங்கு பாஜக வேட்பாளர் முன்னாள் எம்.பி.,சங்கர் லால்வானி எதிராக நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், அமைச்சர் கே.என்.நேருவின் மகனுமான அருண் நேரு, 1,99,207 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 71,163 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக சின்னத்தில் போட்டியிட்ட பாரிவேந்தர் 57,295 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் தேன்மொழி 38,262 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் கடும் இழுபறிக்கு பின் முன்னிலைக்கு வந்துள்ளார். அதுவரை, முன்னிலையில் இருந்த தேமுதிக வேட்பாளரும், அக்கட்சியின் மறைந்த தலைவர் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரன் 466 வாக்குகள் பின் தங்கியுள்ளார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதால், குறைந்த வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் தனித்து களமிறங்கிய நாம் தமிழர் 5 இடங்களில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. ஈரோட்டில் தமாக, கள்ளக்குறிச்சியில் பாமக, குமரியில் அதிமுக, நாகையில் பாஜக, திருச்சியில் அமமுகவை 4ஆம் இடத்திற்கு தள்ளி நாதக மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இந்த 5 தொகுதிகளிலும் அக்கட்சி கணிசமான வாக்குகளை பெற்றுள்ளன.
பாலியல் சர்ச்சையில் சிக்கி கைதான மஜத வேட்பாளர் பிரஜ்வால் ரேவண்ணா, மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஸ் எம். பாட்டீல் 5 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பிரஜ்வால் ரேவண்ணா தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 14 தொகுதிகளில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. INDIA கூட்டணி 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காலையில் 20 தொகுதிகள் வரை பாஜக முன்னிலையில் இருந்தது. 4 தொகுதியில் முன்னிலையில் இருந்த INDIA கூட்டணி, தற்போது படிப்படியாக வெற்றிக் கணக்கை அதிகரித்து வருகிறது.
பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 95,590 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி 59,884 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 42,430 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் சுரேஷ்குமார் 11,759 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஒடிஷா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, பிஜு ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முன்னதாக, அங்கு பாஜகவின் தாமரை மலரும் அறிகுறிகள் தென்பட்ட நிலையில், தற்போது பிஜு ஜனதா தளத்தின் கை ஓங்கத் தொடங்கியுள்ளது. சற்றுமுன்பு வரை பாஜக 70 இடங்களிலும், பிஜு ஜனதா தளம் 61 இடங்களிலும், காங்., 13 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஆட்சியமைக்க அங்கு 74 இடங்களில் வெற்றிபெற்றாக வேண்டும்.
Sorry, no posts matched your criteria.