India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெயில் தாக்கம் காரணமாக, மாநிலம் முழுவதும் மின்தேவை அதிகரித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் இரவு நேரத்தில் மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் ஒரு சில இடங்களில் மின் கட்டமைப்பில் இடையூறுகள் ஏற்படுகிறது. அதனை நிவர்த்தி செய்து, அதிக நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் எனக் கூறிய அவர், நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுகிறது என்றார்.
இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவால், இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ.5.49 லட்சம் கோடி மதிப்பை இழந்துள்ளனர். மதியம் 1 மணி நிலவரப்படி, நிஃப்டி 200 புள்ளிகள் சரிந்து, 22,242 புள்ளிகளுடனும், சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து, 73,294 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது. இதனால், முதலீட்டாளர்களின் மொத்த பங்கு மதிப்பு ரூ.403.39 லட்சம் கோடியில் இருந்து ரூ.397.9 லட்சம் கோடியாக சரிந்தது.
மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்காக, நேற்று தனி விமானம் மூலம் கொல்கத்தா வீரர்கள் புறப்பட்டனர். ஆனால், பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால், விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு கவுகாத்திக்கு திருப்பி அனுப்பப்பட்டது. பயணம் தடைபட்டதால், இன்று வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று, கொல்கத்தா வீரர்கள் சாமி தரிசனம் செய்தனர். பிற்பகல் மீண்டும் கொல்கத்தா புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.
காங்., நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸ் ஒன்று இருந்தது. அதுமட்டுமல்லாமல், ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில் இருந்தது கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதனை கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கைப்பற்றிய போலீசார், குடும்பத்தினரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோத்ரெஜ் கன்ஸ்யூமர் நிறுவனப் பங்கின் விலை ஒரே நாளில் 8% வரை உயர்ந்து, 52 வாரத்தில் இல்லாத அளவில் ₹1,349.65 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதற்கு முன்னதாக, கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நிகர நஷ்டம் ₹1,893 கோடியாக இருந்தாலும், வருவாய் 6% உயர்ந்து ₹3,385.61 கோடியாக இருந்தது. இந்தியா, இந்தோனேஷியாவில் இதன் வர்த்தகம் வளர்ச்சியடைந்துள்ளது.
தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்குநராக அறிமுகமாகும் ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ் நடிப்பில் ரொமான்டிக் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள ‘ரசவாதி’ படமும், கவினின் ‘ஸ்டார்’ படமும் அதே நாளில் திரைக்கு வருகின்றன. இதில், ‘ஸ்டார்’ படத்தின் ட்ரெய்லர் கவனம் ஈர்த்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த முறை அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இம்முறை தொகுதி மாறி ரேபரேலியில் போட்டியிடுவது காங்கிரசுக்கு பின்னடைவாகக் கருதப்பட்டது. ஆனால், இவ்விரு தொகுதிகளிலும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ய பிரியங்கா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மூத்த தலைவர்களின் உதவியுடன் உள்ளூர் மக்களுடன் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், மாலை நேரக் கூட்டங்கள், டிஜிட்டல் பிரசாரங்கள் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்திய அணியின் புதிய ஜெர்சி விலை என்னவென்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தேடி வருகின்றனர். டி20 உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சியை நேற்று பிசிசிஐ அறிமுகம் செய்தது. மூவர்ண கொடிகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஜெர்சியை, அடிடாஸ் கடைகள் மற்றும் இணையதளங்களில் ரூ.5,999-க்கு வாங்கலாம் என்று கூறப்படுகிறது. விலை சற்று அதிகம் என்பதால், ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை (மே 8), நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 14 மாவட்டங்களிலும், மே 9ஆம் தேதி தென்காசி, நெல்லை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்களை செல்போன், லேப்டாப்பில் வைத்திருந்தால் உடனடியாக டெலிட் செய்யும்படி மக்களுக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவற்றைப் பகிர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது. அவரது ஆபாச வீடியோ விவகாரம் கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.