India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உ.பி மீரட் தொகுதியில் பிரபல தொலைக்காட்சித் தொடரான ராமாயணத்தில் ராமராக நடித்த நடிகர் அருண் கோவிலை பாஜக களம் இறக்கியது. அயோத்தி கோயில் மூலமும், ராமராக நடித்தவரை வேட்பாளராக களமிறக்கியது மூலமும் வெற்றி பெறலாம் என்ற பாஜகவின் கணக்குகள் தோல்வியில் முடிந்தது. அங்கு சமாஜ்வாதி வேட்பாளர் சுனிதா வெர்மா 21,105 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளார். 6ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியை விட, திமுக வேட்பாளர் மணி 2 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். இதன் மூலம் திமுக கூட்டணி 40 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி, 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று 2ஆவது இடத்தில் உள்ளார். 2019 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி, 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
2019 மக்களவைத் தேர்தலில் திமுக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. 2004 மக்களவைத் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றியை அவரது மகன் ஸ்டாலின் தலைமையிலான திமுக தற்போது Repeat செய்துள்ளது.
8 வடகிழக்கு மாநிலங்களில், அசாம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக
முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அஸ்ஸாம் – 9, அருணாச்சல பிரதேசம் – 2, திரிபுரா – 2 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. மணிப்பூர், மேகாலயா, மிஸோரம், சிக்கிம், நாகாலாந்து ஆகிய 5 மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெற முடியாமல் பாஜக தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி 230 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் ஆட்சியமைக்கும் முயற்சியாக பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை பெற INDIA கூட்டணி ரகசிய பேச்சு நடத்துகிறதா எனக் கேள்வி எழுந்தது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெராவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ரகசியமாக நடக்கும் பேச்சுவார்த்தையை வெளிப்படையாக கூற முடியாது என பதிலளித்தார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் என்.சி.பி தலைவர் சரத்பவார் தொலைப்பேசி வாயிலாக உரையாடியிருக்கிறார். அப்போது, INDIA கூட்டணியில் இணைந்துகொள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் சரத் பவார். அவரையும் இணைத்துக் கொண்டு ஆட்சியமைக்க INDIA கூட்டணி திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ஜே.டி.யு தலைவர் நிதிஷ்குமாருடன் சரத்பவார் பேசியது குறிப்பிடத்தக்கது.
இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றி பெற்றார். அவர் எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங்கை விட 73,625 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். விக்ரமாதித்யா சிங் அம்மாநிலத்தில் 6 முறை முதல்வராக இருந்த வீரபத்ர சிங்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் தொகுதியில் 6ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 3,50,899 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். தேமுதிக வேட்பாளர் 1,02,512 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் பாலகணபதி 1,02,361 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஆந்திர சட்டசபைத் தேர்தலில் நகரி தொகுதியில் YSR காங்., கட்சி சார்பாக போட்டியிட்ட அமைச்சர் ரோஜா பின்னடைவைச் சந்தித்துள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளரை விட 27,000 வாக்குகள் பின்தங்கியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 151 தொகுதிகளில் வெற்றிபெற்று அசுர பலத்துடன் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த YSR காங்., இந்த முறை 15 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று, ஆட்சியை இழந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.