India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திர சட்டசபைத் தேர்தலில் ஆளும் YSR காங்., கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சி 13 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருப்பதால், ஆட்சி கைநழுவிப் போகிறது. தோல்வியைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து ஜெகன் மோகன் ரெட்டி விலகுகிறார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. TDP அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.
இபிஎஸ் தலைமை பொறுப்பேற்றதில் இருந்து அதிமுக தொடர் சரிவுகளை சந்தித்துள்ளது. 2017இல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019இல் நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டில் சட்டப்பேரவை இடைத்தேர்தல், 2020இல் ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2021இல் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022இல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023இல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020இல் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் அதிமுக தோற்றது.
பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் அங்கம் வகித்து வரும் அரசியல் கட்சித் தலைவர்களை டெல்லி வரச் சொல்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். INDIA கூட்டணி 230-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அக்கூட்டணியின் தலைவர்கள் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில், நிதிஷ்குமார் உள்ளிட்டத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவில் இருந்து பிரிந்து அக்கட்சியையும், சின்னத்தையும் பெற்ற முதல்வர் ஷிண்டே அணி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. INDIA கூட்டணியில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி 11 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேசியவாத காங்.,இல் இருந்து பிரிந்த அஜித் பவாரின் அணி 1 இடத்திலும், சரத்பவார் அணி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிளவுபட்ட அணிகளுக்கு சின்னங்களைத் தவிர எதுவும் மிஞ்சவில்லை.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ‘திராவிட மாடல் ஆட்சி’ என்ற பெயரில் உருவாக்கிய திட்டங்கள் மக்களவைத் தேர்தலில் எதிரொலித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். உரிமைத் தொகை, விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் ஆகிய திட்டங்கள் பெண்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கை அதிகரிக்க செய்துள்ளதாகவும், மகளிரின் பலத்த ஆதரவோடு திமுக வரலாற்று வெற்றியை நோக்கி பயணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகிப்பதால் அக்கட்சித் தொண்டர்கள் மட்டன் பிரியாணி செய்து கொண்டாடினர். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை இரண்டாம் இடத்திலும் அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். திமுகவினரின் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா போட்டியிட்டார். அங்கு அவருக்கும் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரசீத் சேக்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முடிவில் அப்துல் ரசீத் சேக் வெற்றி பெற்றார். இதையடுத்து சேக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவின் பின்னடைவுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தன்னை மிகப்பெரும் தலைவராக மோடி காட்டிக் கொண்டதாகவும், ஆனால் மோடியோ முன்னாள் பிரதமர் ஆக போகிறார் என்றும், இதுதான் தேர்தல் முடிவு அளிக்கும் செய்தி என்றும் தெரிவித்தார்.
பஞ்சாப்பின் ஜலந்தர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அம்மாநில முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி வெற்றி பெற்றுள்ளார். 1,75,993 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 13 மக்களவைத் தொகுதிகளில், காங்கிரஸ் 7 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இடையே கடுமையான இழுபறி நீடிக்கிறது. மாணிக்கம் தாகூர் நீண்ட இழுபறிக்கு பின் முன்னிலைக்கு வந்த நிலையில், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளார். விருதுநகர், தருமபுரி ஆகிய தொகுதிகள் தொடர்ந்து இழுபறி தொகுதிகளாக இருந்து வருகின்றன.
Sorry, no posts matched your criteria.