India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மாலை 7 மணி வரை காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, சென்னை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, குமரி, நீலகிரி, ராணிப்பேட்டை, சேலம், தேனி, நெல்லை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
குஜராத் காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2ஆவது முறையாக வெற்றி பெற்றார். தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்த அவர், காங்கிரஸ் வேட்பாளர் சோனல் படேலை விட 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார். காங்கிரஸ் அவருக்கு நிகரான பலமான வேட்பாளரை அங்கு களமிறக்க தவறியதன் காரணமாக,அமித் ஷாவின் வெற்றி தேர்தலுக்கு முன்பே எளிதானதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கு தேசம் 16 இடங்களிலும், ஜேடியூ 14 இடங்களிலும் என 2 கட்சிகளும் 30 இடங்களில் முன்னிலையில் இருப்பதன் காரணமாகவே பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பாஜக தனித்து 243 இடங்களில் மட்டுமே முன்னிலையில் வகிப்பதால் பெரும்பான்மைக்கு மேலும் 30 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. பாஜக ஆட்சியமைப்பதை தடுக்க ஜேடியூ, தெலுங்கு தேசம் கட்சிகளை இழுக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. எனினும், அது பலனளிப்பதாக தெரியவில்லை.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுகவின் நட்சத்திர வேர்பாளர் கனிமொழி 2,83,690 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் அதிமுக 2ஆவது இடத்தையும், பாஜக கூட்டணி வேட்பாளரை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் முரசொலி 4,12,859 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து களம் கண்ட தேமுதிக வேட்பாளர் சிவநேசன் 1,53,441 வாக்குகளும், பாஜக வேட்பாளர் முருகானந்தம் 1,45,080 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர்.
விஜய பிரபாகரன் வெற்றிபெற வேண்டி, விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா தியானம் செய்தார். மக்களவைத் தேர்தலில், அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளது. விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட்டு இருந்தார். அவருக்கும், காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செய்த அவர், அங்கு சிறிது நேரம் தியானம் மேற்கொண்டார்.
கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வரும், மஜத தலைவருமான ஹெச்.டி. குமாரசாமி போட்டியிட்டார். அவருக்கு 8,51,881 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடா 5,67,261 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதனால் குமாரசாமி 2,84,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தருமபுரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் மணியிடம் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி கடும் போராட்டத்திற்கு மத்தியில் தோல்வியடைந்தார். காலையில் இருந்து சவுமியாவும், மணியும் மாறிமாறி முன்னிலை பெற்று வந்த நிலையில், திடீர் திருப்பமாக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சவுமியா தோல்வியடைந்தார்.
அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் உள்ள ஒரே மக்களவைத் தொகுதியில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 43,058 வாக்குகளை பெற்றுள்ள பாஜக வேட்பாளர் பிஷ்ணு பதாரே, காங்கிரஸின் குல்தீப் ராய் ஷர்மாவைவிட 21,996 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். புதுச்சேரி (1) & லட்சத்தீவுகளில் (1) காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் பரிசாகவே இந்த வெற்றி கருதப்படுகிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்கள் சாமானிய மக்களை வெகுவாகச் சென்றடைந்துள்ளது. அதன் காரணமாகவே 20 ஆண்டுகளுக்கு (2004) பிறகு, 39 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.