India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் அதர்வா, நிமிஷா சஜயன் நடிக்கும் ‘டிஎன்ஏ’ (DNA) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் இந்தப் படத்தை, ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். ஆக்ஷன், த்ரில்லிங், சேஸிங் என பரபரப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்து, பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு மாணவிக்கு, 200-க்கு 212 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. தனியார் பள்ளி ஒன்றில் இறுதித் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், கணக்குப் பாடத்தில் 200க்கு 212, குஜராத்தி மொழிப்பாடத்தில் 200க்கு 211 மதிப்பெண்களை அந்த மாணவி பெற்றிருந்தார். இதுதொடர்பான புகைப்படம் வைரலான நிலையில், தவறுதலாக அச்சிடப்பட்டதாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மக்களவைக்கு நடைபெற்ற 3ஆம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மக்களவைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், 3ஆவது கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையொட்டி, காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்தனர். ஏற்கெனவே அறிவித்தபடி மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
பாஜக ஆட்சியில் தலித்துகளுக்கு எதிராக அதிக பாகுபாடு காட்டப்படுவதாக சோனியா காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்து விட்டதாகவும், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு எதிராக அதிக பாகுபாடு காட்டப்படுவதாகவும் தெரிவித்தார். இதற்கு மோடியும், பாஜகவுமே காரணம் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது. தொழில்நுட்ப கல்லூரிக்கான இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. <
உத்தர பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்களை வாக்களிக்கவிடாமல், ஆதித்யநாத் அரசின் போலீசார் அராஜகம் செய்வதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “தேர்தல் ஆணையமும், உ.பி., தலைமைத் தேர்தல் அதிகாரியும் இதை பார்த்தார்களா? இல்லையா? நடப்பவை அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கும் மக்கள், பாஜகவுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘புஷ்பா’ திரைப்படம் தன்னை பான் இந்திய நடிகராக அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்க்க எந்தவிதத்திலும் உதவவில்லை என்று பகத் ஃபாசில் வெளிப்படையாக கூறியுள்ளார். புஷ்பா – 1 படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்த அனுபவம் குறித்து பேசிய அவர், அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு இயக்குநர் சுகுமார் மேல் வைத்திருந்த அன்பு மட்டுமே காரணம். அதனால் வேறு எந்த மேஜிக்கும் எனக்கு நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், டிஆர்எப் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். குல்காமில் தேடுதல் வேட்டையின்போது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் டிஆர்எப் தலைவர் பாசித் தர்ரும் ஒருவராவார். 18 தீவிரவாத தாக்குதல் வழக்குகள் நிலுவையில் இருந்தநிலையில், அவர் தலைக்கு ₹10 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது.
உத்தரப் பிரதேசத்தின் அவோன்லா தொகுதியில் இஸ்லாமியப் பெண்களை வாக்களிக்க விடாமல் போலீஸ் தடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செகுப்பூரில் 116ஆம் எண் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்ற இஸ்லாமியப் பெண்களை மட்டும் பாஜகவினரும், போலீசாரும் தனியே பிரித்து, வாக்களிக்க விடாமல் தடுத்துள்ளனர். அத்துடன், அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மலிவான, அனைத்து பருவநிலைகளிலும் கிடைக்கும் காய்கறிகளில் பீட்ரூட்டும் ஒன்று. அதை ஜூஸ் செய்து அருந்தினால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். அதை தெரிந்து கொள்வோம். *ரத்த சோகையை போக்கும் *ரத்தத்தை சுத்திகரிக்கும் *முடி உதிர்வு பிரச்னையை குறைக்கும் *சரும பிரச்னைகளைப் போக்கும் * பார்வை குறைபாட்டை போக்கும் * செரிமானக் கோளாறு, அல்சரை குணப்படுத்தும் *ஞாபக மறதிக்கு தீர்வு தரும்.
Sorry, no posts matched your criteria.