India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் மோடி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என சிவசேனா உத்தவ் அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 240 இடங்களுக்கும் குறைவாகவே பெறும் எனக் கூறியுள்ள அவர், எதேச்சதிகாரத்தில் ஜனநாயக விரோதமாக செயல்பட்ட மோடியை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிராவில் INDIA கூட்டணி 29 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஜேடியூ 14 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் 16 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து, இரு கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்கும் முனைப்பில் INDIA கூட்டணியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், பாட்னாவில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அக்கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 3,73,991 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி 2ஆவது இடத்தையும், பாஜக கூட்டணி வேட்பாளரான ஜான்பாண்டியன் 3வது இடத்தையும், நாம் தமிழர் கட்சி 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் களம் கண்டன. அதேபோல அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம் கட்சிக் தேர்தலை சந்தித்தன. ஆனால், எந்தக் கட்சியும் வெற்றி பெறவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சிகள் தோல்வியை சந்தித்துள்ளன. அதேநேரம் திமுக கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இத்தேர்தலில் வெற்றிவாகை சூடியுள்ளன.
பாஜக ஓபிசி அணியின் துணை தலைவராக இருந்த வித்யா வீரப்பன், நாம் தமிழர் கட்சியில் இணைந்து கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டார். வீரப்பனின் மகள் என்பதால் வித்யா குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் 61,728 வாக்குகள் பெற்று 4ஆவது இடத்தை பிடித்தார் வித்யா வீரப்பன். 2.88 லட்சம் வாக்குகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் முதலிடத்தில் உள்ளார்.
ஒடிஷாவில் 25 ஆண்டுகால நவீன் பட்நாயக் ஆட்சிக்கு முடிவுரை எழுதியுள்ள மக்கள், பாஜகவுக்கு முதல் முறையாக வாய்ப்பளித்துள்ளனர். மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பாஜக 81 தொகுதிகளில் வெற்றி முகத்துடன் உள்ளது. கடந்த முறை 112 தொகுதிகளில் வென்றிருந்த ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் இந்த தேர்தலில் 48 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்., 14 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், சென்னையில் திடீரென கனமழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. இதனால், அலுவலகம் சென்றோர் வீடு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். திடீர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை, கிண்டி, நந்தனம், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
தேனி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளரான டிடிவி தினரகரனை வீழ்த்தி திமுகவின் தங்கத் தமிழ்செல்வன் அபார வெற்றிபெற்றுள்ளார். 2ஆவது இடத்தை அதிமுக பிடித்துள்ள நிலையில், டிடிவி தினகரன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதனையடுத்து, தேனியில் திமுக தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு தேவைப்படுவதால், அவரின் நீண்ட நாள் கோரிக்கையான ஆந்திராவிற்கான சிறப்பு அந்தஸ்தை தருவதாக, தங்களது தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
2014 தேர்தலில் மோடிக்காக பிரசாந்த் கிஷோர் மற்றும் I-Pac குழுவினர் பணியாற்றினர். அந்தத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியமைத்தது. இதையடுத்து பல மாநிலங்களில் I-Pac குழுவினர் தேர்தல் பணி செய்தனர். இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 300க்கும் மேல் வெற்றி பெறும் என பிரசாந்த் கிஷோர் கணித்திருந்தார். ஆனால் அந்த கணிப்பு பொய்யாகும் வகையில், பாஜக அணி 290-295 தொகுதிகளிலேயே முன்னிலையில் உள்ளது.
Sorry, no posts matched your criteria.