News May 7, 2024

ஜெயக்குமார் மரணம்: புகைப்படம் வெளியீடு

image

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உயிரிழந்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 2ஆம் தேதி மாயமான அவர், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அவரது முகம், கழுத்து, கை, கால்கள் அனைத்தும் இரும்புக் கம்பியால் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களை சேகரித்துள்ள போலீசார், அவரது மரணத்திற்கான காரணத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

News May 7, 2024

INDIA கூட்டணி வென்றால் GST சட்டம் திருத்தப்படும்

image

INDIA கூட்டணி வென்றால், பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட GST சட்டம் திருத்தப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ராஞ்சி பிரசாரத்தில் பேசிய அவர், “பாஜக அரசு ஐந்து வரி அடுக்குகளுடன் தவறான GST திட்டங்களை செயல்படுத்தியது. அதை குறைந்தபட்சமாக ஒரு வரி அடுக்காகத் திருத்தி அமல்படுத்துவோம். ஏழைகள், சிறு நிறுவனங்கள் மீதான வரிச்சுமையைக் குறைப்போம்” எனக் கூறினார்.

News May 7, 2024

காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

image

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குல்காம் ரெட்வானி பெயன் பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பதிலடி கொடுத்த பாதுகாப்புப்படையினர் 4 தீவிரவாதிகளை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

News May 7, 2024

SETC பேருந்துகளில் UPI பரிவர்த்தனை அறிமுகம்

image

SETC பேருந்துகளில் UPI மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம், பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டுகளை எளிதில் பெறும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெபிட், கிரெடிட் கார்டுகள், Gpay, Phonepe போன்ற UPI பரிவர்த்தனை மூலம் இனி SETC பேருந்துகளில் டிக்கெட் பெறலாம்.

News May 7, 2024

ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்

image

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராக ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வளிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய அவர், “ரோஹித் சோர்வுற்று இருப்பதாக நினைக்கிறேன். சிறிது ஓய்வு அவருக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும். ஆனால், MI அணியின் முக்கிய வீரராக இருப்பதால், அவருக்கு ஓய்வு கிடைக்குமா எனத் தெரியவில்லை” எனக் கூறினார்.

News May 7, 2024

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

image

‘வெண்ணிலா கபடி குழு’ அப்புக்குட்டி நடித்துள்ள ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். கிராமப் பின்னணியில், காதலை நகைச்சுவை கலந்து எழுதி, இயக்கியுள்ளார் ராஜு சந்திரா. மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், ஸ்ரீஜா ரவி, ரோஜி மேத்யூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை, பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

News May 7, 2024

ஹரியானா பாஜக அரசுக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு?

image

90 இடங்களைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவையில், பாஜக அரசுக்கு 48 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. அதில் 41 பேர், பாஜகவினர். 6 பேர் சுயேச்சைகள். மேலும் ஒருவர், HL கட்சியைச் சேர்ந்தவர். JJB கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்களும் ஆதரிப்பதாக சொல்லப்படுகிறது. 3 சுயேச்சைகள் வாபஸ் பெற்றதால், பலம் 45ஆக குறைந்த போதிலும், JJB எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுவதால் ஆட்சிக்கு ஆபத்தில்லை எனக் கூறப்படுகிறது.

News May 7, 2024

இரவில் உடற்பயிற்சி செய்தால் தூக்கம் பாதிக்குமா?

image

பணிச்சூழல் காரணமாக திரைப்பட நட்சத்திரங்கள் போன்றோர், ஜிம்மில் இரவில் உடற்பயிற்சி செய்யும் நிலை உள்ளது. அப்படி செய்தால் தூக்கம் பாதிக்குமா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. ஆனால், பிரபல மருத்துவ இணையதள கட்டுரையில், இரவில் உடற்பயிற்சி செய்தால், உடல் சோர்வடைந்து நல்ல ஆழ்ந்த தூக்கம் வருமென்று கூறப்பட்டுள்ளது. தூங்கச் செல்ல 90 நிமிடத்துக்கு முன்பு, உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

EPF கணக்கு இருப்போருக்கு ₹50,000 இலவசம்

image

EPF கணக்கு வைத்திருப்போருக்கு இலவசமாக ₹50,000 வரை அளிக்கப்படவுள்ளது. இந்த பலனைப் பெற, பணியாற்றும் நிறுவனங்களை ஊழியர்கள் மாற்றினாலும், ஒரே EPF கணக்கை 20 ஆண்டுகள் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருந்தால், லாயல்டி திட்டத்தின் கீழ் ₹50,000 வரை அளிக்கப்படவுள்ளது. ₹5,000 ஊதியம் எனில் ₹30,000, ₹10,000 ஊதியம் எனில் ₹40,000, ₹10,000க்கு மேல் ஊதியம் எனில் ₹50,000 இலவசமாக அளிக்கப்படவுள்ளது.

News May 7, 2024

100 நாள்களைக் கூட நிறைவு செய்யாத பாஜக அரசு

image

ஹரியானா முதல்வராக நயாப் சைனி பதவி ஏற்று 100 நாள்களைக் கூட நிறைவு செய்யாத நிலையில், அவரது அரசு ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. 2019 இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெறாத பாஜக (41), ஜேஜேபியுடன் (10) இணைந்து ஆட்சி அமைத்தது. இக்கூட்டணி கடந்த மார்ச் 12ஆம் தேதி முறிந்தது. இதனையடுத்து, 3 சுயேச்சை எல்.எல்.ஏக்கள் ஆதரவைப் பெற்ற, பாஜக போராடி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!