India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளாவின் பல மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. க்யூலெக்ஸ் இனத்தைச் சேர்ந்த கொசுக்களால் பரவும் இக்காய்ச்சல், 1937ஆம் ஆண்டு உகாண்டாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. தலைவலி, உடல்வலி, வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும். இதுவரை இக்காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.
இரவில் ஆழ்ந்து தூங்கும் போது கனவுகள் தோன்றும். அப்போது சிலருக்கு கனவில் தெய்வங்களும் வருவதுண்டு. அப்படி கனவில் தெய்வங்கள் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனவில் தெய்வம் தெரிகிறது எனில் இறைச் சிந்தனை மிகுந்திருக்கிறது என்று அர்த்தம். இதனால், அந்த கனவு காண்போருக்கு தெய்வ அருள் சேரும்; விரைவில் மங்களகரமான செய்தி வரும்.
அரியலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏலாக்குறிச்சி என்ற இடத்தில் சாலையோரம் லாரி நின்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த கார், லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து சடலங்களைக் கைப்பற்றிய போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
நாட்டு பசுநெய்யை ஆயுர்வேத மருத்துவ நூல்கள் ‘திரவ தங்கம்’ என்று போற்றுகின்றன. நெய் பழசாகப் பழசாக விசேஷ நற்குணங்களை அடைகின்றது. நெய்யை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள ஒமேகா 3 அமிலம் உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைக்கிறது. கபவாதம், எலும்பு வலு இழப்பு போன்ற ஆஸ்டியோபோரோசிஸ் தொடர்புடைய நோய்களை விரட்டி அடிக்கும் ஆற்றல் நெய்க்கு உண்டு.
12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 8 முதல் மே 13ஆம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியின் தொடக்க விழா நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்டன்ட் மாஸ்டர்கள், இயக்குநர்கள் என்பதை எல்லாம் தாண்டி அன்பறிவு சகோதரர்கள் தன்னுடைய அண்ணன்களைப் போன்றவர்கள் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “முதல் முதலாக என்னை நம்பி ஒரு புரொடியூசரிடம் பேசி, எனக்காக வாய்ப்புக் கேட்டவர்கள். என்மீது எனக்கே நம்பிக்கை இல்லாமல் இருந்தபோது, நான் பெரிய ஆளாக வருவேன் என்று அன்பறிவு இருவர்தான் ஊக்குவித்தார்கள்” என்றார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்லும் முயற்சியை முறியடித்து விட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவ கர்னல்கள் 2 பேர் மூலம் ரஷ்யாவின் எப்எஸ்பி உளவு அமைப்பு, ஜெலன்ஸ்கியை கொலை செய்ய முயன்றதாகவும், அதை உக்ரைன் உளவுத்துறை கண்டுபிடித்து முறியடித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 2 அதிகாரிகளையும் பிடித்து உளவுத்துறை விசாரித்து வருவதாகவும் உக்ரைன் அரசு கூறியுள்ளது.
IPL 2024 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் ஜேக் ஃபிரேசர், 20 பந்து அல்லது அதை விட குறைவான பந்தில் 3 முறை அரை சதம் விளாசிய முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். சன் ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக 15 பந்துகளில் 2 அரை சதங்களை அவர் விளாசியுள்ளார். இதையடுத்து, இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிரமாண்ட சிக்சரை விளாசி, 20 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
மக்களவைக்கு 3ஆம் கட்டமாக இன்று நடைபெற்ற தேர்தலில் 61.45% வாக்குகள் பதிவாகியுள்ளன. 3ஆவது கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் (இரவு 8 மணி நிலவரம்), அதிகபட்சமாக அசாமில் 75.26% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கடுத்து, கோவாவில் 74.27% வாக்குகளும், மேற்கு வங்கத்தில் 73.93% வாக்குகளும், கர்நாடகத்தில் 67.76% வாக்குகளும், சத்தீஸ்கரில் 66.99% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இந்தியாவிலேயே முதல் ஹைபிரிட் கிரிக்கெட் மைதானம், ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கையான புல்வெளி கொண்டது சாதாரண மைதானமாகவும், இயற்கை, சிந்தடிக் பைபர் புல்வெளி கொண்டது ஹைபிரிட் மைதானமாகவும் கருதப்படுகிறது. அதன்படி, தரம்சாலாவில் முதல் ஹைபிரிட் மைதானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மைதானம் 5% சிந்தடிக் பைபர் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.