India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி காலை 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் 30-40கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக கண்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம், முட்டையில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவை கண்களை புற ஊதா கதிர்களில் இருந்து காக்கும். முட்டையில் இருக்கும் வைட்டமின் ஏ, ஈ, துத்தநாகம் போன்றவை, சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இருப்பினும் முட்டையை அதிக அளவில் சாப்பிடக் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
* எப்போதும் இனிமையும், புன்னகையும் கொண்டவனாக இரு. அதுவே உன்னைக் கடவுளின் அருகில் கொண்டு சேர்க்கும்.
*பிறருடைய பாராட்டு, பழிச்சொல் குறித்து சிந்திக்கத் தொடங்கினால் உன்னால் சாதிக்க முடியாது.
* உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் அதை பின்தொடர்ந்திடு. கோழையாகவும், கபடதாரியாகவும் இருப்பது கூடாது.
மகளிர் கிரிக்கெட்டின் புதிய டி20 தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மூனி முதல் இடத்தில் உள்ளார். இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 5ஆவது இடத்தில் நீடிக்கிறார். பவுலர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் முதல் இடத்திலும், இந்தியாவின் தீப்தி சர்மா 2ஆவது இடத்திலும் உள்ளனர். ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் தீப்தி சர்மா 4ஆவது இடத்தில் உள்ளார்.
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யவும், தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரியும் அவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றிக்குப் பின் விஷால் நடிப்பில் வெளியான படம் ‘ரத்னம்’. ஹரி இயக்கியிருந்த இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். ஏப்ரல் 26ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களுடன் சுமார் 20 கோடி வசூலைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் மே 24ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.
➤ 1933 -தலித் மக்களின் நலனுக்காக காந்தி 21நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
➤ 1980 -பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
➤ 1921 -உருமேனியாவில் பொதுவுடமை கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
➤ 1902 -கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் உயிரிழந்தனர்.
➤ 2017 -தமிழ் விக்கிபீடியாவில் 100,000-வது கட்டுரை எழுதப்பட்ட நாள் இன்று.
தனக்கு எதிராக வாக்களிக்க சில ஜிகாதிகளை காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், குறிப்பிட்ட மதத்தவர்களிடம் தனக்கு எதிராக வாக்களிக்க காங்., கேட்டுக்கொண்டதாக குற்றம் சாட்டிய அவர், மக்கள் வாக்கு ஜிகாத்தை ஏற்க தயாரா எனக் கேள்வி எழுப்பினார். மேலும், வாக்கு ஜிகாத்தா இல்லை ராமராஜ்யமா என்பதே மக்களே முடிவு செய்யட்டும் என்றார்.
பிரதமர் மோடியின் புத்தகத்திற்கு ஆதரவளித்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு வேறொரு புத்தகத்தை பரிந்துரை செய்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ். சாந்தனு குப்தா என்பவர் எழுதிய ‘நான் மோடிக்கு வாக்களிக்க 101 காரணங்கள்’ என்ற புத்தகத்தை பகிர்ந்திருந்தார் சாய்னா. இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்திய மக்களை தவறாக வழிநடத்தும் முன் ‘மோடியிடம் நாடு கேட்கும் 108 கேள்விகள்’ என்ற புத்தகத்தைப் படிங்க என்றார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முதல் இரு போட்டிகளில் வெற்றிபெற்ற வங்கதேச அணி நெற்றி நடைபெற்ற 3ஆவது போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்த வங்கதேச வீரர் தவ்ஹித் ஹ்ரிடோய் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இவ்விரு அணிகளுக்கு இடையேயான 4ஆவது போட்டி மே 12இல் நடக்கிறது.
Sorry, no posts matched your criteria.