India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
+2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானதையடுத்து பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரண்டு நாள்களில் பொறியியல் படிப்பிற்கு தமிழகம் முழுவதும் சுமார் 42,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதல் நாளில் 2,097 பேரும் நேற்று 21,017 பேரும் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூன்) 6ஆம் தேதியாகும்.
12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. சென்னை, திருச்சி, கோவை, நாகை, மதுரை, நெல்லை, சேலத்தில் இன்றும், திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், தருமபுரியில் நாளையும், செங்கல்பட்டு, திருப்பூர், அரியலூர், கடலூர், தேனி, குமரி, கிருஷ்ணகிரியில் மே 10ஆம் தேதியும், மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்த நாள்களிலும் இந்நிகழ்ச்சி நடக்கிறது.
‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சோனியா அகர்வால், செல்வராகவன் இயக்கத்தில் தொடர்ந்து 3 படங்களில் நடித்தார். அதன்பின் அவரைக் காதலித்து திருமணம் செய்தவர் சில ஆண்டுகளிலேயே விவாகரத்துப் பெற்றார். இந்நிலையில், நல்ல கதை அமைந்தால் செல்வராகவன் படத்தில் கண்டிப்பாக மீண்டும் நடிப்பேன் எனக் கூறிய அவர், ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தை ரீ-ரிலீஸ் செய்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றார்.
டி20 போட்டிகளில் 200 ரன்களுக்கும் மேல் அடிப்பது என்பது தற்போது மிகவும் சாதாரணமாகிவிட்டது. அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் 20 முறை 200+ ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுதான் அதிகபட்சமாகும். முன்னதாக கடந்த ஆண்டு 19 முறையும், 2022இல் 5 முறையும் அடிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இன்னும் 18 போட்டிகள் இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
* பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு மே 16 முதல் ஜூன் 1 வரை விண்ணப்பிக்கலாம்.
* சேப்பாக்கத்தில் நடைபெறும் CSKvsRR அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை மே 9ஆம் தேதி தொடங்குகிறது.
* டி20 கிரிக்கெட் தொடரில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய அணி வீரர் என்ற பெருமையை சாஹல் தன்வசமாக்கினார்
* இன்று முதல் வெப்பம் குறைய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்
பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அண்மையில் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் சங்கரை அடித்து துன்புறுத்துவதாக அவரது வழக்கறிஞர் பேசியதையடுத்து, சவுக்கு சங்கரின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது மகனை அடித்து துன்புறுத்துவது தொடர்பாக நீதி விசாரணையை வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘அரண்மனை 4’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலைக் குவித்து வருகிறது. வெளியான 5 நாட்களில் சுமார் 25 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை விடுமுறை என்பதாலும், போட்டிக்கு பெரிய படங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் இப்படத்திற்கு வசூல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நீங்கள் படத்தைப் பார்த்துவிட்டீர்களா?
பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை அமைக்க அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தனது அறிக்கையில், புதிய மின்கம்பங்களை அமைக்கும்போது, வேகத்தடைகளுக்கு அருகே அமைக்காமல் தள்ளி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதுகாப்பாக மின்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக உள்ளாட்சி, ஊராட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஐபிஎல்லில் இன்று நடைபெறும் போட்டியில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி தலா 6 வெற்றிகள் பெற்றுள்ளன. இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் SRH 4, LSG 6ஆவது இடங்களில் உள்ளன. இன்று LSG தோல்வியடையும் பட்சத்தில் அடுத்த 2 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் இன்றைய போட்டி LSGக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
▶மே – 8, சித்திரை – 25 ▶கிழமை – புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM, 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை நேரம்: 10:30 AM – 12:00 AM ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶திதி: பிரதமை
Sorry, no posts matched your criteria.