News June 5, 2024

2.18 லட்சம் வாக்குகள் பெற்று நோட்டா புதிய சாதனை

image

ம.பி. மாநிலம் இந்தூர் தொகுதியில்,2,18,674 வாக்குகள் பெற்று நோட்டா புதிய சாதனை படைத்துள்ளது. காங்., வேட்பாளர் அக்‌ஷய் கண்டி கடைசி நேரத்தில் பாஜகவில் இணைந்ததால், நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு காங்., பிரசாரம் மேற்கொண்டது. இதனால், பாஜகவின் சங்கர் லால்வானி 12,26,751 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதற்கு முன்னதாக, 2019இல் நடந்த எம்.பி. தேர்தலில் பீகாரில் 51,660 வாக்குகள் பதிவானதே அதிகபட்சமாக இருந்தது.

News June 5, 2024

பாஜக கூட்டணியில் நீடிப்போம்

image

I.N.D.I.A கூட்டணியை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர் கனகமேடலா ரவீந்திர குமார் கூறியுள்ளார். ஆந்திராவில் பாஜக, ஜனசேனா கட்சிகளுடனான தங்கள் கூட்டணி, அரசியல் கணக்கு மட்டுமின்றி நம்பகத்தன்மை சம்பந்தப்பட்டது என்றும், எனவே, பாஜக கூட்டணியிலேயே நீடிப்போம் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த கூட்டணி, ஆந்திராவின் வளர்ச்சிக்கான பாதை ஆகும் எனக் குறிப்பிட்டார்.

News June 5, 2024

வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி?

image

இந்தியா – அயர்லாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி, இன்றிரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக, இந்திய அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது இந்திய அணியின் முதல் லீக் போட்டி என்பதால், டி20 உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில், அயர்லாந்து ஒருமுறை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News June 5, 2024

இது மோடியின் உத்தரவாதம்!

image

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டும் கூட, பாஜக வென்ற எண்ணிக்கையை பெற முடியவில்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். பாஜக தலைமையிலான இந்த 3ஆவது ஆட்சியில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்றும், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது, மோடியின் உத்தரவாதம் என்றும் தெரிவித்தார். மேலும், 1962க்கு பின் ஒரே கட்சி தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியமைக்கிறது எனக் குறிப்பிட்டார்.

News June 5, 2024

டெல்லியில் இன்று I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் கூட்டம்

image

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெறும் இக்கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும், புதிய ஆட்சி அமைக்கவும், வியூகம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News June 5, 2024

தமிழக கட்சிகளின் வாக்கு சதவிகிதம்

image

தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம்:
▶திமுக – 26.93%
▶அதிமுக – 20.47%
▶பாஜக – 11.20%
▶காங்கிரஸ் – 10.73%
▶தேமுதிக – 2.60%
▶மார்க்., கம்யூனிஸ்ட் – 2.54%
▶நோட்டா – 1.06%
நாம் தமிழர் கட்சியின் வாக்கு விகிதத்தை, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடவில்லை.

News June 5, 2024

இன்றையத் தலைப்பு செய்திகள்

image

▶39 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக
▶பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை காங்., நிறைவேற்றும்: ராகுல் காந்தி
▶8% வாக்குகளை பெற்று, நாதக மாநில அந்தஸ்து பெற்ற கட்சியாக உருவெடுத்தது
▶பாஜகவின் ராமர் கோயில் அரசியல் எடுபடவில்லை: திருமாவளவன்
▶7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமித் ஷா வெற்றி வாகை சூடியுள்ளார்

News June 5, 2024

பாஜகவை வெற்றி பெற செய்த மாநிலங்கள்

image

2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாஜக கூட்டணிக்கு அபார வெற்றியை கொடுத்த மாநிலங்கள் பட்டியல் பின்வருமாறு:
▶மத்தியப் பிரதேசம் – 29 / 29, ▶குஜராத் – 25 / 26, ▶சத்தீஸ்கர் – 10 / 11, ▶பீகார் – 27 / 40, ▶கர்நாடகா – 19 / 28, ▶ஒடிசா – 19 / 21, ▶ஆந்திரா – 21 / 25, ▶ஜார்கண்ட் – 9 / 14, ▶ராஜஸ்தான் – 14 / 25, ▶உத்தரகாண்ட் – 5 / 5, ▶ஹிமாச்சல் பிரதேசம் – 4 / 4, ▶டெல்லி – 7 / 7

News June 5, 2024

20 ஆண்டுகளுக்கு பிறகு 40/40

image

தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. திமுக- 22, காங்கிரஸ்- 10, கூட்டணி கட்சிகள்- 8 தொகுதிகளை கைப்பற்றி மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளன. கடைசியாக, 2004ஆம் ஆண்டில் கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணி தான் 40 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.

News June 5, 2024

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை

image

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வில், தமிழகத்தைச் சோ்ந்த 8 மாணவா்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா். 67 போ் முதலிடம் பிடித்துள்ளனா். நீட் தோ்வு வரலாற்றிலேயே, தமிழக மாணவா்கள் இத்தகைய சிறப்பிடங்களைப் பெறுவது இதுவே முதல்முறை ஆகும். அதேபோன்று, இதுவரை இல்லாத வகையில் நிகழாண்டில் நீட் தோ்வு எழுதிய 1.52 லட்சம் தமிழக மாணவா்களில், 89,426 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

error: Content is protected !!