India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அதிமுக 20.47 சதவீத வாக்குகளையும் பாஜக 11.20% வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. ஆனால், திமுகவின் மொத்த வாக்குகள் 26.93% மட்டுமே. இதனால், அதிமுக பாஜக கூட்டணி பிரியாமல் இருந்திருதால் தமிழகத்தில் சில தொகுதிகளை அவர்கள் வென்றிருப்பார்கள் என்று விமர்சகர்கள் கூறுகின்றன. தமிழகத்தின் அனைத்து தொகுதிளிலும் இரண்டு & முன்றாவது இடங்களை இந்த இரு கட்சிகள்தான் கைப்பற்றி இருக்கின்றன.
தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சியின் அளவுகோளாக கருதப்படும் 5ஜி அலைக்கற்றை ஏல ஒதுக்கீடு நடைமுறை 3ஆவது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடப்பதாக இருந்த இந்த ஏலம் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, ஜூன் 13ஆம் ஆம் தேதி நடைபெறும் என மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது. இந்த ஏலத்தில் ₹96,318 கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றை ஒதுக்க வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆந்திராவை பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்தவர் சந்திரசேகர ராவ். தனி மாநிலம் உருவானது முதல் தொடர்ந்து 2 முறை முதல்வராக இருந்துள்ளார். இவருடைய பிஆர்எஸ் கட்சி, மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. அவரது கட்சியின் 8 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்ததோடு, வாக்கு சதவீதம் தற்போது 17%க்கும் குறைவாக உள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் பிஆர்எஸ் கட்சியின் வாக்கு சதவீத, 41.71% ஆக இருந்தது.
2024 தேர்தலில் மும்பை வடமேற்குத் தொகுதியில் போட்டியிட்ட ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவு வேட்பாளர் ரவீந்திரா தத்தாராம் வைக்கருக்கு 4,52,644 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு அடுத்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா வேட்பாளர் அமோல் கஜனன் கிர்திகாருக்கு 4,52,596 வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம் வைக்கர் 48 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இதுவே 2024 தேர்தலில் மிக குறைந்த வாக்கு வித்தியாச வெற்றி ஆகும்.
543 மக்களவைத் தாெகுதிகளில் ஆளும் கட்சிக்கு அடுத்து அதிக இடங்களில் வெல்லும் கட்சி, அல்லது 10% இடங்கள், இல்லையேல் அதற்கு மேல் வெல்லும் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து அளிக்கப்படும். 2014இல் 44, 2019இல் 52 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரசுக்கு அப்போது அப்பதவி அளிக்கப்படவில்லை. இம்முறை 99இல் வென்ற காங்கிரசுக்கு, பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி அளிக்கப்படும்.
மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்து மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 3 மாநிலங்களில் மகாராஷ்டிரா, ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் 2 கட்சிகளும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல்கள் சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா (44) நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார். தரவரிசையில் டாப்-4 இடத்தை பிடித்த அவர், தனது ஜோடியை தானே தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பைப் பயன்படுத்தி முடிவு செய்துள்ளார். அதன்படி, இரட்டையர் பிரிவில் தன்னோடு இணைந்து விளையாட ஸ்ரீராம் பாலாஜியை தேர்வு செய்துள்ளார். இத்தகவலை இந்திய டென்னிஸ் சங்கத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. இந்நிலையில் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வென்றுள்ளது. இது கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் 47 தொகுதிகள் அதிகம் ஆகும்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது கட்சியின் தொண்டர்கள் உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த அனில் (28) என்ற இளைஞர் ஃபேனில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னய்யாலு (63) என்ற முதியவர் டிவி பார்த்துக் கொண்டே மாரடைப்பால் உயிரிழந்தார்.
INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இன்று நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. புதிய ஆட்சி அமைக்க இன்னும் 38 இடங்களே தேவைப்படுகிறது. அதற்கான ஆதரவை திரட்டவும் இக்கூட்டத்தில் வியூகம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.