India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீண்ட காலமாக, அன்பறிவு மாஸ்டர்களின் இயக்கத்தில் கமல் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. அறிவிப்புடன் நின்ற, அப்படத்தின் புது அப்டேட்டை இன்று தனது பிறந்தநாளில் கமல் வெளியிட்டுள்ளார். RKFI தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கவுள்ளார். இது ஆங்கிலம் & பின்லாந்து மொழியில் வெளியான ‘சிசு’ படத்தின் ரீமேக்காக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

*இந்தியாவில் 3 கோடி கார்களை விற்ற முதல் நிறுவனம் என்ற சாதனையை மாருதி சுசூகி படைத்துள்ளது. *நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டில் பொதுத்துறை வங்கிகள் ₹49,456 கோடி லாபம் ஈட்டியுள்ளன. *செப்டம்பர் மாதத்தில் நாட்டின் சேவைத்துறை வளர்ச்சி 60.9 புள்ளிகளாக பதிவு. *கூகுள் மீது ஆப்பிள் நிறுவனம் ₹9 ஆயிரம் கோடி முதலீடு. *தாமிரம் வாங்க தென் அமெரிக்க நாடுகளுடன் இந்தியா பேச்சு.

மத்திய அரசின் ‘Sanchar Saathi’ இணையதளம் மூலம் தொலைந்துபோன உங்கள் போனை ட்ராக் செய்து கண்டுபிடிக்கலாம். இதில் வேறு யாரும் உங்கள் போனை பயன்படுத்தாமல் இருக்க ‘Block’ செய்யவும் முடியும். காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தால்தான் Sanchar Saathi மூலம் போனை கண்டுபிடிக்க முடியும். <

ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்யவும் திமுகவினர் தயாராக உள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருமண விழாவில் பேசிய அவர், திமுகவை ஒழிக்க யார் யாரோ வந்து சென்றதாகவும், ஆனால் எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது எனவும் குறிப்பிட்டார். SIR-க்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தாலும், அதன் பணிகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் CM வலியுறுத்தினார்.

வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் Jio, Airtel, VI நெட்வொர்க்குகளின் ரீசார்ஜ் கட்டணங்கள் 10- 12% வரை அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் 5G பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த விலையுயர்வு முடிவை டெலிகாம் நிறுவனங்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. உதாரணமாக, ₹199 ரீசார்ஜ் கட்டணம் ₹222-ஆக அதிகரிக்கக்கூடும். நீங்க மாதம் எவ்வளவுக்கு ரீசார்ஜ் பண்றீங்க?

30 வயதுக்கு முன்பு முடி கொட்டுவது இயல்பாகிவிட்டது. இந்நிலையில், முடி உதிர்வு பிரச்னை உள்ள 10-ல் 6 பேருக்கு கடுமையான மன அழுத்தம் இருப்பதும், 10-ல் 3 பேர் தூக்கமின்மையால் தவிர்ப்பதும், இன்னும் சிலர் சத்தான உணவை சாப்பிடாததும் தான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, முடி அடர்த்தியாக வளர நீங்கள் சாப்பிடவேண்டிய சூப்பர்புட்ஸ் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. SHARE.

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ், அந்நாட்டின் குடியுரிமையை துறந்து இந்திய குடியுரிமையை பெற்றுள்ளார். அவருடைய தாய் மும்பையை சேர்ந்த ஆங்லோ-இந்தியன் என்பதால் குடியுரிமையை பெற ஓராண்டு காலமாக முயற்சித்து வந்தார். இந்திய குடிமகனாக இருப்பதையே விரும்புவதாக அவர் அவ்வப்போது தெரிவித்திருக்கிறார். சர்வதேச போட்டிகளில் கலக்கிய இவர், இனி இந்தியராக Bengaluru FC அணியில் விளையாடவுள்ளார்.

2-10 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இல்லாத அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுக்காமலே விட்டுவிட்டீர்களா? உங்களுக்காக RBI புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர் (அ) வாரிசுதாரர்கள் இந்த பணத்தை வட்டியுடன் பெற முடியும். நீண்ட காலமாக செயல்பாட்டில் இல்லாத உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க KYC ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். உங்கள் பழைய வங்கி கணக்கின் பேலன்ஸை <

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் (ATC) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. கோளாறை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை தொடர்புகொண்டு நிலவரங்களை தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என்று நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவை <<18222861>>பெண் கடத்தல்<<>> சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தின் Manchester-ஐ, Monster-கள் உலா வரும் பகுதியாக மாற்றியதே திமுகவின் சாதனை என விமர்சித்துள்ளார். TN காவல்துறை, திமுகவின் ஏவல்துறையாக செயல்படக் கூடாது எனவும், இளம்பெண்ணை மீட்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.