India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் மிகுந்த நம்பிக்கையுடன் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அங்கு தோல்வியை சந்தித்துள்ளார். இதையடுத்து அவர் என்ன அரசியல் நகர்வை மேற்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவை மீண்டும் உரிமை கோரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவாரா? பாஜகவில் சேருவாரா? இல்லை அரசியல் வேண்டாமென ஒதுங்குவாரா? என அரசியல் ஆர்வலர்கள் விவாதித்து வருகின்றனர்.
மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இன்று பாஜக மேலிடம் மனு அளிக்கவுள்ளது. தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால், ஆட்சியை அமைக்க NDA & INDIA கூட்டணிகள் அரசியல் கட்சிகளிடம் பாஜக ஆதரவு கேட்டுவருகிறது. இந்தப் பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடியின் இல்லத்தில் கூடிய பாஜகவின் அரசியல் உயர்மட்ட குழு, இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தனிப்பெரும்பான்மை இல்லாததால், பாஜக 3வது முறையாக ஆட்சியமைக்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், இரு தலைவர்களும் பாஜகவிற்கு சில நிபந்தனைகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்டநாள் கோரிக்கையான ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து, மக்களவை சபாநாயகர் பதவி மற்றும் முக்கிய அமைச்சரவை இலாகாக்களை இரு தலைவர்களும் கேட்பதாக கூறப்படுகிறது.
பாமகவுக்கு வாக்கு வங்கி இருக்கும் இடங்களில்தான் பாஜகவின் வாக்குகள் அதிகரித்துள்ளதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி 11.2% ஆக உயர்ந்துள்ளது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நாடு முழுவதும் பாஜகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் மின்னணு வாக்கு இயந்திரத்தை வைத்து பாஜக விளையாடியுள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.
கர்நாடகாவின் 3 முன்னாள் முதல்வர்களும் வெற்றி பெற்றுள்ளனர். மஜத முன்னாள் முதல்வர் குமாரசாமி, மண்டியா தொகுதியில் 2.84 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல் பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, ஹாவேரி தொகுதியில் 43,513 வாக்குகள் வித்தியாசத்திலும், மற்றொரு பாஜக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பெலகாவி தொகுதியில் 56,433 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
அதிமுகவுடன் கூட்டணியை முறித்து, தனியாக நின்றால் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கலாம் என அண்ணாமலை உறுதியளித்ததால் அதற்கு சம்மதித்தது பாஜக மேலிடம். ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தை கூட வெல்லாமல் படுதோல்வி அடைந்தததால், பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உள்ளது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலாவது, ஒரு சில இடங்கள் கிடைத்திருக்கும் எனவும், அதை முறித்ததால் அண்ணாமலை மீது கடும் அதிருப்தி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் நேரில் ஆஜராகியுள்ளார். நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷிடம் தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அவர் ஆஜரானார்.
ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மொத்தம் 147 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று தோல்வியடைந்தது. இதையடுத்து தற்போது ஆளுநரை சந்தித்த நவீன் பட்நாயக் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். 2000 ஆண்டு முதல் ஒடிஷா முதல்வராக இருந்த அவர் தற்போது ஆட்சியை இழந்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு எக்ஸ் பதிவு மூலம் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், நேருவுக்குப் பிறகு தொடர்ந்து 3ஆவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்கும் முதல் தலைவர் நீங்கள்தான் என்றும், வளமான, வலிமையான இந்தியாவை கட்டி எழுப்புவீர்கள். பொருளாதாரம், சமூகநீதி, வேலைவாய்ப்பு துறைகளில் புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள் என்று மக்கள் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த மக்கள் விரோத, மோசமான ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். விஜயவாடாவில் பேசிய அவர், தேர்தலில் TDP கட்சியை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி. மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார். என் வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த தேர்தலைக் கண்டதில்லை எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.