News June 5, 2024

2026 சட்டப்பேரவைத் தேர்தலின் முன்னோட்டமா?

image

மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலின் முன்னோட்டமாக கருத முடியாது என அரசியல் திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டு மக்கள் பகுத்தறிந்து வாக்களிக்கும் திறன் கொண்டவர்கள் என்றும், தற்போதைய வெற்றி பிரதமர் தேர்வுக்கான முடிவு எனவும் கூறுகின்றனர். அதே நேரம், 2026 சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவு 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் மதிப்பீடாக இருக்கும் என கருதுகின்றனர்.

News June 5, 2024

மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது பாமக

image

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து 4.23% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால், மாநில கட்சி அந்தஸ்தை மீண்டும் இழந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதற்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதில் மாநில கட்சி அந்தஸ்தை ஏன் நீக்கக் கூடாது எனக் கேட்டிருப்பதாகவும் தெரிகிறது.

News June 5, 2024

பதவியை ராஜினாமா செய்யும் ஃபட்னாவிஸ்?

image

உ.பி தோல்விக்கு பொறுப்பேற்று மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தேவேந்திர ஃபட்னாவிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். உ.பி மாநில பாஜக மேலிட பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அம்மாநிலத்தில் பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 80 தொகுதிகளை உடைய அம்மாநிலத்தில், 33 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 62 இடங்களில் பாஜக வென்றது.

News June 5, 2024

“INDIA கூட்டணி” நாட்டை வழிநடத்தும் : ஸ்டாலின்

image

நாட்டை வழி நடத்தும் பணியை INDIA கூட்டணி மேற்கொள்ளும் என்று முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். சர்வாதிகார ஒற்றையாட்சிக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை, தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும், மதவாத சக்திகளை ராமர் கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்த்தி காட்டியிருக்கிறார்கள் எனவும் பாஜகவை விமர்சித்த ஸ்டாலின், சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News June 5, 2024

பாஜகவின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன?

image

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. மைனாரிட்டி அரசு என்பது தலைக்கு மேல் கத்தி தொங்கும் நிலை என்பதால், கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்ல வேண்டிய சூழலுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆட்சியை பலமாக தக்கவைக்க INDIA கூட்டணியில் இருக்கும் கட்சிகளை NDA கூட்டணியில் இணைக்க பாஜக முயலும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

News June 5, 2024

இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, தி.மலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். கனமழையின்போது மணிக்கு 30 – 40 கி.மீ. வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News June 5, 2024

Miss-ஆன ராயன்.. Ready- ஆன மகாராஜா

image

நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’, ஜூன் 14ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனம் பெற்ற நித்திலன் சாமிநாதன் இந்த படத்தை இயக்கி உள்ளார். சில தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பு பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் முன்னணி பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார்.

News June 5, 2024

தொடர் தோல்வி: அதிமுகவை மீட்டெடுப்பாரா இபிஎஸ்?

image

மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. இதுபோல 2019 மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், இடைத்தேர்தல் என அனைத்திலும் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் 2026இல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்குள் தோல்வி பாதையிலிருந்து அதிமுக மீண்டு வரும் வகையில் புதுத்திட்டம் வகுத்து கட்சியை இபிஎஸ் தயார்படுத்துவாரா? அவரால் முடியுமா? எனக் கேள்வி எழுந்துள்ளது.

News June 5, 2024

சிறையில் இருக்கும் அம்ரித் பால் எப்படி பதவியேற்பார்?

image

சிறையில் இருந்தவாறே தேர்தலில் போட்டியிட்ட ஷேக் அப்துல் ரஷித் (பாரமுல்லா), அம்ரித் பால் சிங் (காதூர் சாஹிப்) ஆகியோர் வென்றுள்ளார். எம்.பி.,க்களாக பதவியேற்க வேண்டுமெனில் அவர்கள் சத்தியப் பிரமாணம் செய்ய நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும். NSA வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவர்கள், இதற்கு சிறைத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பது விதி. பதவியேற்றப் பின் அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவர்.

News June 5, 2024

மோடி ராஜினாமா ஏற்பு

image

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றிபெற்றதை அடுத்து, மீண்டும் பிரதமராக பதவியேற்கும் வகையில் தனது பதவி மற்றும் அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் முர்முவிடம் மோடி வழங்கினார். இதையடுத்து, அவரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது. மேலும், புதிய அரசு அமையும் வரை மோடி காபந்து பிரதமராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!