News June 5, 2024

ஒடிஷாவின் அடுத்த முதல்வர் யார்?

image

ஒடிஷாவில் தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜக, முதல்முறையாக ஆட்சியமைக்க உள்ளது. முதல்வர் பதவிக்கான ரேஸில் அம்மாநில பாஜக மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தேசிய துணைத் தலைவர் வைஜெயந்த் பாண்டா, அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஜுவல் ஓரம், சம்பித் பத்ரா ஆகியோர் இந்த ரேஸில் உள்ளனர். இவர்கள் அனைவரும் மக்களவைத் தேர்தலில் வென்றது குறிப்பிடத்தக்கது.

News June 5, 2024

மேலும் 10 எம்.பி.க்கள் பாஜகவுக்கு ஆதரவு

image

மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைய சுயேச்சை, சிறு கட்சிகளை சேர்ந்த மேலும் 10 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 240 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி கட்சிகளை பாஜக நம்பியிருக்கிறது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 10 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இது பாஜகவுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

News June 5, 2024

வெளியூர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாள்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் 835 பேருந்துகளும், 8ம் தேதி 570 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதேபோல் சென்னை திரும்ப வசதியாக 9ம் தேதி 705 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தெரிவித்தார்.

News June 5, 2024

2026இல் தமிழ்நாட்டில் பாஜக முதல்வர்: அண்ணாமலை

image

2026இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் வாங்கிய வாக்குகளை விட 6% குறைவாக வாங்கிய திமுக, 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றதாக கூறுவது நகைப்பை ஏற்படுத்துவதாக கூறிய அவர், வரும் தேர்தலில் 30% வாக்குகளை பெற்று ஆட்சியில் அமருவோம் என்றார். நோட்டா கட்சி என்று பாஜகவை விமர்சித்த அதிமுகவுக்கு தற்போது புத்தி வந்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

News June 5, 2024

இடைக்கால ஜாமினை நீட்டிக்கக்கோரிய மனு தள்ளுபடி

image

இடைக்கால ஜாமினை நீட்டிக்கக்கோரிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனுவை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜூன் 2 வரை உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியிருந்த நிலையில், உடல் நிலை காரணமாக அதனை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்திடம் முறையிட அறிவுறுத்தியிருந்த நிலையில், அந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

News June 5, 2024

உண்மையை உடைத்து பேசிய ராகுல் டிராவிட்

image

நியூயார்க்கில் இன்று நடைபெறும் T20 WC லீக் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட், நாக்-அவுட் போட்டிகளில் தாங்கள் வெற்றிக் கோட்டை கடக்கவில்லை என்பது உண்மைதான் என்றும், இந்த முறை உலகக்கோப்பையை நிச்சயம் வெல்லும் அணியை பெற்றுள்ளதாகவும், தங்களது அனுபவம் அதற்கு உதவும் எனவும் உறுதியுடன் கூறியுள்ளார்.

News June 5, 2024

‘மகாலட்சுமி’ காங்கிரசுக்கு ‘கை’ கொடுக்காதது ஏன்?

image

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக முன் வைத்த உரிமைத் தொகை திட்டம், அக்கட்சி ஆட்சி அமைக்க பெரிதும் உதவியது. அதே போல, கர்நாடகாவிலும் மகாலட்சுமி திட்டம் என்ற பெயரில் மகளிருக்கு உதவித் தொகை அறிவித்தது, காங்கிரஸ் அரசு அமைய கை கொடுத்தது. ஆனால், நாடு முழுதும் மாதம் ₹8,500 தரும், காங்கிரசின் மகாலட்சுமி திட்ட வாக்குறுதி பெண்களிடம் நம்பிக்கையை விதைக்கவில்லை என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

News June 5, 2024

படுதோல்வி அடைந்த 15 மத்திய அமைச்சர்கள்!

image

18ஆவது மக்களவைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், எல்.முருகன், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் 15 பேர் படுதோல்வி அடைந்துள்ளனர். அதன் விவரம் இதோ:- *அஜய் மிஸ்ரா *அர்ஜூன் முண்டா *கைலாஷ் செளத்ரி *ராஜீவ் சந்திரசேகர் *மகேந்திரநாத் பாண்டே *சாத்வி நிரஞ்சன் ஜோதி *ராவ் சாஹேப் தன்வே *ஆர்.கே.சிங் *சஞ்சீவ் பல்யான் *வி.முரளிதரன் *நிஷித் பிரமனிக் *சுபாஷ் சர்கார்.

News June 5, 2024

BREAKING: ஆட்சியமைக்கிறது பாஜக

image

காபந்து பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக ஆட்சியமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை நிதிஷ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வழங்கியுள்ளனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் சுமார் 1.30 மணி நேரம் நீடித்த நிலையில், தற்போது நிறைவுபெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைக்கிறது.

News June 5, 2024

ரஜினி, சத்யராஜ் இடையே என்னதான் பிரச்னை?

image

1986ல் வெளிவந்த ‘மிஸ்டர் பாரத்’ படத்திற்கு பிறகு, ‘கூலி’ படத்தில் ரஜினியுடன் சத்யராஜ் இணையவுள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக திரை வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில், இத்தகவல் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த சத்யராஜ், இருவருக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை எனவும், வலுவான கதாபாத்திரம் அமையாததால், இத்தனை ஆண்டுகளாக இணைந்து நடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!