India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் நிறுவனம் ‘கூகுள் வாலட்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியில், பாஸ்கள், ஐடி கார்டுகள், டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றின் தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளலாம். மோசடி அபாயத்தை குறைக்க, ஆவணங்களை பயோமெட்ரிக் மூலம் டிஜிட்டல் ரீதியில் நிர்வாகம் செய்யலாம்.
கூகுள் வாலட்டில், ஜிபே போல பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளது.
திமுக பழிவாங்கும் அரசியல் செய்வதாக வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை, போதை பொருட்களை தடுக்க திறனில்லாத திமுக அரசு, விமர்சிப்பவர்களை பழிவாங்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். பெண்களை இழிவுப்படுத்துபவர்களை கைது செய்ய வேண்டும் என்றால் பாதி திமுகவினரை கைது செய்ய வேண்டும் என்ற அவர், திமுகவின் பழிவாங்கும் அரசியலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.
எதிர்கால பாதுகாப்புக்காக தங்கம் வாங்க விரும்பும் நபர்கள் மத்திய அரசின் தங்க சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில், தங்கத்தை ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் தனிநபர்கள் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு 1 கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும். வங்கிகள், அஞ்சலகங்கள் ஆகியவற்றில் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
திமுகவின் 3 ஆண்டு ஆட்சியைப் பற்றிப் பேச இபிஎஸ்ஸுக்கு அருகதை இல்லை என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி வன்கொடுமை என அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்ததாக குற்றம் சாட்டிய அவர், ‘அதிமுகவை அமித்ஷா திமுக’வாக மாற்றியது தான் இபிஎஸ்ஸின் சாதனை என்றார். திமுகவின் 3 ஆண்டு ஆட்சி வேதனையானது என இபிஎஸ் கூறியிருந்தார்.
கறிவேப்பிலையில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் B1, B2, C ஆகியவை அடங்கியுள்ளன. இதனுடன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சர்க்கரை நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. மேலும், கறிவேப்பிலையில் இரும்பு மற்றும் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் ரத்த சோகை பிரச்னைகளை குறைக்கும். இனி உணவில் உள்ள கறிவேப்பிலையை தூக்கி எறியாமல், அதை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் லக்னோ அணி திணறி வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல், பேட்டிங்கை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. கே.எல்.ராகுல் (29), டி கார் (2), மார்கஸ் ஸ்டோனிஸ் (3) ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். லக்னோ அணி 12 ஓவரில் 70/4 ரன்களை எடுத்துள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுமென்று ஏற்கெனவே கூறியுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளது. இந்தத் தடுப்பூசியின் வெளிப்படைத்தன்மையை நிறுவிட, த்ரோம்போசிஸ் & த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் உள்ளிட்ட பல அரிய பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்று மருந்துடன் வைக்கப்பட்டிருந்த அச்சிடப்பட்ட எச்சரிக்கை குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜப்பானுக்கு எதிரான T20 போட்டியில் மங்கோலியா அணி மோசமான சாதனை படைத்துள்ளது. இன்று நடைபெற்ற 2ஆவது போட்டியில் JPN அணி, 217/7 ரன்கள் குவித்தது. 218 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய MNG அணி, 12 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதன்மூலம் T20 வரலாற்றில் 2ஆவது குறைந்தபட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை மங்கோலியா பெற்றது. இதற்கு முன், 2005இல் IoM என்ற அணி ஸ்பெயினுக்கு எதிராக 10 ரன்களில் ஆல்அவுட்டானது.
நடிகர் விஜய் சேதுபதிக்கும் அவரது மகன் சூர்யாவுக்கும் இடையே ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சிக்கித் தவிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வேல்ராஜ், விடுதலை 2ஆம் பாகத்தின் அடுத்த ஷெட்யூலுக்காக அதிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில், வேல்ராஜ் வந்தால்தான் நடிப்பேன் என்று சூர்யா அடம்பிடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய வரலாற்றில் முகலாயர்களையும் மாம்பழங்களையும் பிரிக்க முடியாது என்றே சொல்லலாம். ‘மாம்பழங்களின் பொற்காலம்’ என வர்ணிக்கப்படும் முகலாயர்களின் ஆட்சியில்தான், பல புதிய மா ரகங்களை உருவாக்க ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. அந்த வகையில், முதிர்ச்சி பெற்ற மாமரத்தின் கிளைகளை வெட்டி, அதில் வேறு வகையான சிறு மா கன்றை ஒட்டி வளர்த்து, புதிய மாங்கனிகளை விளைக்கும் ‘ஒட்டு மா’ என்ற மர உருவாக்க முறை நடைமுறைக்கு வந்தது.
Sorry, no posts matched your criteria.