India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லக்னோ அணிக்கு எதிரான IPL போட்டியில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் விளையாடிய LSG அணி, 165/4 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய SRH அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. குறிப்பாக அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் இணைந்து 16 பவுண்டரி, 14 சிக்ஸர்களை விளாசியதுடன், 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
தேர்தல் நடத்தை விதிகளை மோடி நடத்தை விதிகள் என்று மாற்றலாம் என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். பாஜகவினரின் வெறுப்பு பேச்சு தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், தேர்தல் ஆணையம் மோசடி ஆணையமாக இருப்பதாக சாடியுள்ளார். தனது வாழ்நாளில் மோடியை போல் பொய் சொல்லும் பிரதமரை இதுவரை கண்டதில்லை என்றும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரரும், மலையாள இயக்குநருமான சங்கீத் சிவன் (61) உடல்நலக் குறைவால் காலமானார். மலையாளம், இந்தியில் பல்வேறு படங்களை இயக்கியுள்ள சங்கீத் சிவன், மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 1992ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான ‘யோதா’ என்ற மலையாளப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சங்கீத் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லக்னோவுக்கு எதிரான போட்டியில், ஹைதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட் 16 பந்தில் அரைசதம் அடித்துள்ளார். 166 ரன்களை இலக்காக களமிறங்கிய அந்த அணியின் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா, லக்னோ அணி வீரர்களின் பந்து வீச்சை மைதானத்தின் நான்கு புறங்களிலும் விரட்டி வருகின்றனர். ஹெட் 58 , அபிஷேக் சர்மா 48 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 6 ஓவரில் 107 ரன்களை குவித்துள்ளது.
தென்னிந்தியர்களின் நிறம் குறித்து காங்கிரஸின் முன்னாள் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது கருத்துக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகை பிரனீதா சுபாஷ் தனது புகைப்படத்தை பகிர்ந்து, “நான் தென்னிந்தியர். இந்தியரைப் போலதான் இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாஃபர் சாதிக்கின் மீது, தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். குற்றப்பத்திரிகையில் ஜாஃபர் சாதிக், சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்தியதாகவும், அதன் மூலம் பல கோடி ரூபாய் ஆதாயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், தகவல்களை மறைக்க தனது ஃபோனை ஜாஃபர் சாதிக் உடைத்தாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். மூளை ரத்தநாள கசிவு பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவருக்கு, வேலூர் CMC மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், துரை தயாநிதியை நலம் விசாரித்ததுடன், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
நம் உடலில் ஹீமோகுளோபின் குறைந்தால் பல்வேறு பிரச்னைகள் வரும். சில சமயங்களில் காலையில் எழுந்த உடன் தலைசுற்றல் அல்லது கண்முன் இருட்டாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதன் பொருள் உங்கள் ரத்த அழுத்தம் குறைவாக உள்ளது அல்லது உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளது. இதை தவிர்க்க, உலர் திராட்சை, கீரைகள், பீட்ருட், முட்டை உள்ளிட்ட ரத்த விருத்திக்கு உதவும் உணவுகளை சாப்பிடலாம்.
தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளியில் 6-12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் தமிழக அரசு ₹1000 வழங்க உள்ளது. இந்தத் தொகையை பெற, +2 முடித்த மாணவர்கள், பொறியியல், கலை & அறிவியல் போன்ற உயர்க்கல்வி படிப்புகளில் சேர வேண்டும். இதையடுத்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, பாடப் புத்தகம், பொது அறிவு நூல்கள் போன்றவற்றை வாங்க தமிழக அரசு மாதந்தோறும் ₹1000 வழங்கும்.
ஐபிஎல் தொடரின் 57ஆவது லீக் போட்டியில் SRH அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது LSG அணி. டாஸ் வென்ற LSG அணி பேட்டிங்கை தேர்வு செய்த களமிறங்கியது. LSG அணி, ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆயுஷ் படோனி (55), நிக்கோலஸ் பூரன் (48), கே.எல்.ராகுல் (29) ரன்கள் எடுத்தனர். SRH தரப்பில் SRH பந்துவீச்சாளர்களில் புவனேஷ்வர் 2 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Sorry, no posts matched your criteria.