India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கமல் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடக்க உள்ளதாகவும், அங்குள்ள விமான நிலையத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன் நடிக்கும் முக்கியமான சண்டைக் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. கேங்ஸ்டர் படமாக உருவாகும் இது, இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
பாஜக தேசியத் தலைவர் பதவிக்கு ஜெ.பி.நட்டா 2020ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். 3 ஆண்டுகள் மட்டுமே தலைவராக இருக்கலாம் என்ற கட்சிக் கொள்கையின்படி, அவரது பதவிக் காலம் கடந்த ஆண்டு (2023) நிறைவு பெற்றது. ஆனால், தேர்தல் காரணமாக அவரது பதவிக்காலம் ஓராண்டுக்கு (ஜூன் 2024 வரை) நீட்டிக்கப்பட்டது. இந்த மாதத்துடன் அது நிறைவு பெறவுள்ளதால் புதிய தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பப் பதிவு கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 2.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 1.87 லட்சம் பேர் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், ஓமன் அணிக்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆடிய ஆஸி., அணி, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. ஹெட், மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, வார்னர் 56(50), ஸ்டாய்னிஸ் 67(36) பொறுப்புடன் விளையாடி அரை சதம் விளாசினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் ஆஸி., அணி 164 ரன்கள் குவித்தது.
சுந்தர் சி இயக்கி நடித்துள்ள ‘அரண்மனை 4’ திரைப்படம், வரும் 21ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகவுள்ளது. கடந்த மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலகம் முழுவதும் ₹100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி, விடிவி கணேஷ் நடித்த இப்படத்துக்கு, ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பணியாளர்களும் வெளிநாடு செல்வதற்கு பள்ளிக் கல்வி இயக்குநரிடம் கட்டாயமாக முன் அனுமதி பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விடுப்பு வழங்க மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
மக்களவைக்கு பாஜகவையும், சட்டசபைக்கு ஆம் ஆத்மியையும் தேர்வு செய்வதை டெல்லி மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக அக்கட்சியின் எம்.பி., சந்தீப் பதக் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வென்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், டெல்லியில் இம்முறை குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் பாஜக வென்றுள்ளது. அதே நேரம் பஞ்சாப்பில் அதன் வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.
பப்புவா அணிக்கு எதிரான T20 உலகக் கோப்பை போட்டியில், உகாண்டா வீரர் ஃப்ராங்க் நுசுகா புதிய சாதனை படைத்துள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், T20 உலகக் கோப்பை வரலாற்றில் சிறந்த எகனாமியில் (எகனாமி-1) பந்துவீசிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்பு, SA வீரர் பார்ட்மேன் (2.25) வீசியதே சிறந்த எகனாமியாக இருந்தது.
தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் மார்ச் 16ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் இன்று (ஜூன் 6) நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை முதல் ₹50,000-க்கு மேல் பணம், பொருள்கள் கொண்டு செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் இருக்காது.
Sorry, no posts matched your criteria.