India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க தடை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு மே 22 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது அலுவலக ஊழியர் தொடர்ந்த மனுவிற்கு, குண்டர் சட்டம் என யூகத்தின் அடிப்படையில் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடிகை அமலா பால் கடந்த ஆண்டு தனது நண்பர் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்தார். இந்நிலையில், கர்ப்ப காலத்தில் உடன் இருந்து நன்றாகக் கவனித்துக் கொள்ளும் கணவருக்கு நன்றி தெரிவித்து, சமூக வலைத்தளத்தில் நீண்டதொரு பதிவிட்டுள்ளார். அதில், நான் உன்னை வார்த்தகளால் கூற முடியாத அளவு அதிகமாக நேசிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக காஸா மக்கள் தங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து உலகின் பல நாடுகளும் இஸ்ரேலின் எல்லையான கெரெம் ஷாலோம் வழியாக, காஸாவிற்கு மனிதநேய உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், கடந்த வாரம் இப்பகுதியில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 4 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து இஸ்ரேல் எல்லையை மூடியது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது மீண்டும் திறந்துள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 143 ▶குறள்: விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துதொழுகு வார். ▶பொருள்: நம்பி பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 9.4 ஓவரில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணியின் கைவசம் 62 பந்துகள் மீதம் இருந்தது. இந்நிலையில், 100+ ரன்களை விரட்டி ஆடுகையில், அதிக பந்துகளை மீதம் வைத்த அணி என்ற சாதனையை SRH படைத்துள்ளது. இதற்கு முன்பாக 2022இல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 116 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய டெல்லி அணி 57 பந்துகள் மீதம் இருக்கையில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.
இன்று (மே 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி பல சாதனைகள் படைத்துள்ளது. இதில் ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஜோடி 34 பந்தில் 100 ரன்கள் எடுத்து அசத்தினர். இதன்மூலம் நடப்பு தொடரில் இரண்டாவது முறையாக குறைந்த பந்தில் 100 ரன்கள் எடுத்த ஜோடி என்ற சாதனையைப் படைத்தனர். முன்னதாக டெல்லிக்கு எதிரான போட்டியில் 31 பந்தில் 100 ரன்கள் எடுத்தது இந்த ஜோடி.
இன்று (மே 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருந்தாலும், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என காங்., வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவு தலைவர் பிட்ரோடா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மோடி, தமிழர்களின் பெருமையைக் காக்க காங்., உடனான கூட்டணியை முறித்துக்கொள்ள முதல்வர் ஸ்டாலின் தயாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஸ்டாலினுக்கு துணிச்சல் உள்ளதா என்றும் சவால் விடுத்துள்ளார்.
இன்று (மே 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Sorry, no posts matched your criteria.