News June 6, 2024

கரும்பு விவசாயி சின்னத்தில் விழுந்த 79 ஆயிரம் வாக்குகள்

image

கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 79 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும், சில சுயேட்சை வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது. 13 சுயேச்சைகளும், 5 இடங்களில் பாமஐ கட்சியும் போட்டியிட்டது. கரும்பு விவசாயி சின்னத்துக்கு மட்டும் 79,203 வாக்குகள் கிடைத்தது. கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்ட நாதக 8.13% வாக்குகளை பெற்றுள்ளது.

News June 6, 2024

சவுமியாவை தோற்கடித்த அரூர் தொகுதி மக்கள்

image

தருமபுரியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சவுமியாவை, திமுக வேட்பாளர் மணி 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை தொகுதிகளில் பாமகவும், அதை போல மேட்டூர், பாலக்கோடு தொகுதிகளில் திமுகவும் முன்னிலை பெற்றன. ஆரூர் தனி தொகுதியில் மட்டும் திமுக வேட்பாளருக்கு 40 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக கிடைத்ததே சவுமியா தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது.

News June 6, 2024

தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ்

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் விலக்கிக் கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல், கடந்த இரண்டரை மாதமாக அமலில் இருந்த விதிமுறைகள் இன்று இரவுடன் விலக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது சிலமணி நேரம் முன்கூட்டியே தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News June 6, 2024

திமுக எம்பிக்கள் முதல்வரிடம் வாழ்த்து

image

மக்களவைத் தேர்தலில் வென்ற திமுக எம்பிக்கள் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர். இதற்காக அண்ணா அறிவாலயத்திற்கு வந்த முதல்வருக்கு, திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 22 வேட்பாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து கூட்டணி கட்சி எம்பிக்கள் அவரை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.

News June 6, 2024

உத்தவ் தாக்கரே பாஜக கூட்டணியில் இணைகிறாரா?

image

INDIA கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவா சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது. மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இது பொய்யான தகவல், உத்தவ் தாக்கரே ஒருபோதும் பாஜகவின் NDA கூட்டணியில் இணையமாட்டார் என தேசியவாத காங்., மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

News June 6, 2024

தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்கிறது

image

தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின் வாரியம் ₹1.60 லட்சம் கோடி கடனுடன், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால், கடந்த 2022 -23இல் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்படும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அடுத்த மாதம் 6% வரை மின் கட்டணம் உயர்வு இருக்கும் என தெரிகிறது.

News June 6, 2024

‘கூலி’ படத்தில் நடிக்கும் அபிராமி?

image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படத்தில் நடிகை அபிராமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

News June 6, 2024

2024 மக்களவைத் தேர்தலில் 65.79% வாக்குப்பதிவு

image

2024 மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 65.79% வாக்குகள் பதிவானதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக அசாமில் 81.56% வாக்குகளும், குறைந்தபட்சமாக பிஹாரில் 56.19% வாக்குகளும் பதிவாகியுள்ளன. தமிழ்நாடு – 69.72%, கேரளா – 71.27%, ஆந்திரா – 80.66%, கர்நாடகா – 70.64%, உ.பி – 56.92%, குஜராத் – 60.13%, டெல்லி – 58.69%, மேற்கு வங்கம் – 79.29%, ஒடிஷா – 74.44% வாக்குகள் பதிவாகியுள்ளன.

News June 6, 2024

ஸ்டிக்கர் ஒட்டினால் வாகனம் பறிமுதல்: ஐகோர்ட்

image

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டி போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வாகனங்களில் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் ₹500, 2-வது முறை ₹1500 அபராதம் வசூலிக்கப்படும் முறை மே 2ஆம் தேதி முதல் சென்னையில் அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையை தமிழகம் முழுவதும் அமல்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில், ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

News June 6, 2024

கோப்பையை கோலியால் மட்டுமே பெறமுடியாது: தில்ஷன்

image

நடப்பு டி20 உலகக்கோப்பையில் ஏதேனும் ஒரு ஆசிய அணிதான் கோப்பையை கைப்பற்றும் என இலங்கை முன்னாள் வீரர் தில்ஷன் தெரிவித்துள்ளார். விராட் கோலி நன்றாக விளையாடுவதாக தெரிவித்துள்ள அவர். கோலி ஒருவரால் மட்டும் இந்தியாவுக்கு கோப்பையை பெற்று தர முடியாது என்றார். மற்ற இந்திய வீரர்களும் அவருக்கு உதவ வேண்டும் என்றும், அப்படி நடந்தால் இந்தியா நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!