India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் INDIA கூட்டணி (ஆம் ஆத்மி மற்றும் காங்.,) டெல்லியில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி இல்லை, ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என்று டெல்லி அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல் கட்சியாக ஆம் ஆத்மி கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது.
ஓபிசி, தலித், முஸ்லிம்களின் வாக்குகள் பாஜகவுக்கு செல்லாதபடி, அகிலேஷ் சாதுர்யமாக காய் நகர்த்தினார். பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், அரசியலமைப்பு மாற்றப்படும் என முதலில் கூறியது பாஜக வேட்பாளர் லல்லு சிங்தான். அதை கேடயமாக பயன்படுத்திய அகிலேஷ், பாஜக 400 தொகுதிகளில் வென்றால் ஓபிசி, தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை பறித்து விடுவார்கள் என பிரசாரம் செய்தது தேர்தல் முடிவில் எதிரொலித்துள்ளது.
உ.பி. மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில், சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத், பாஜகவின் லல்லு சிங்கை தோற்கடித்து அதிர்ச்சி அளித்துள்ளார். இதற்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அயோத்தி வளர்ச்சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு கிடைக்காததால், உள்ளூர் மக்களிடையே பாஜக மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 28 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளித் திறப்பு ஜூன் 6ஆம் தேதிக்கு பதில் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு அறிவித்த தேதியில் தான் பள்ளிகளை திறக்க வேண்டும். உத்தரவை மீறி முன்கூட்டியே மாணவர்களை பள்ளிகளுக்கு வர சொன்னால், கடும் நடவடிக்கை பாயும் என்றும், உரிய அனுமதி பெற்று தான் பள்ளி வாகனங்களை இயக்க வேண்டும். மீறினால், வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு இலாகா ஒதுக்குவது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகள் உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறையைக் கேட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமித்ஷா மற்றும் நட்டாவுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஏற்கெனவே TDP, JDU கட்சிகளுடன் அமித்ஷா, நட்டா ஆலோசனை மேற்கொண்ட நிலையில், முக்கிய துறைகளை விட்டுத்தர பாஜக மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சண்டிகர் விமான நிலையத்தில் பெண் CISF வீரர் நடிகை கங்கனாவை கன்னத்தில் அறைந்த நிலையில், தான் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறி கங்கனா வீடியோ வெளியிட்டுள்ளார். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி அவர் தன்னை அறைந்ததாகக் கூறிய கங்கனா, பஞ்சாப்பில் தீவிரவாதம் வளர்ந்து வருவது கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக, பஞ்சாப்பில் போராடிய விவசாயிகளை தீவிரவாதிகள் என கங்கனா குறிப்பிட்டிருந்தார்.
வீட்டில் இருக்கும் மின் சாதனங்களை பாதுகாக்க MCB பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலான வீடுகளில் தற்போது பொருத்தப்படுகிறது. அதுபோல, Current ஷாக் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் சாதனம்தான் RCD. இதை வீடுகளில் கட்டாயம் பொருத்த வேண்டும் என அரசு பரிந்துரைக்கிறது. வயர்களில் சேதம் ஏற்படும் போது, அதை நாம் தெரியாமல் தொட்டால், RCD ட்ரிப்பாகி Current ஷாக்கில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
கனிமொழி பாஜகவிற்கு வர தயார் என்றால் தான் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து பரிசீலிப்பதாக சமீபத்தில் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள கனிமொழி, பாஜகவை வளர்ப்பது எனது வேலை இல்லை என்றும், நான் பாஜகவுக்கு வரவேண்டும் என்றால் பெரியார் வாழ்க என அண்ணாமலை கூற வேண்டும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, அண்ணாமலை பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கனிமொழி வலியுறுத்தியிருந்தார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் என பலர் விண்ணப்பிக்க தயாராக உள்ளனர். அதேபோல், புதிய ரேஷன் கார்டு அடுத்த வாரம் முதல் வழங்கப்படவுள்ளதால், அவர்களும் விண்ணப்பிக்கலாம். தற்போது தேர்தல் நடத்தை விதி வாபஸ் பெறப்பட்டதால், ஒருசில நாள்களில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, தகுதியான நபர்களுக்கு ஜூலை முதல் ₹1000 வழங்கப்படும் என தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.