News May 9, 2024

ஐடிஐ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இதையொட்டி, 102 அரசு தொழிற்பயிற்சி மையங்கள், 305 தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் ஐடிஐ படிப்புகளில் சேர்வதற்கு நாளை முதல் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் 8 மற்றும் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜூன் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

News May 9, 2024

காலியாக இயங்கும் வந்தே பாரத் ரயில்கள்: காங்கிரஸ்

image

தொடர் விடுமுறை காரணமாக மற்ற ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், வந்தே பாரத் ரயில்கள் மட்டும் 50%க்கும் குறைவான பயணிகளுடன் காலியாக இயங்குவதாக கேரள காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. IRCTC தளத்தில் இருந்து பெறப்பட்ட தரவுகளை அதன் X பக்கத்தில் வெளியிட்டுள்ள கேரள காங்கிரஸ், கட்டணம் அதிகமாக இருப்பதால் வசதி படைத்தவர்கள் மட்டுமே வந்தே பாரத் ரயிலை பயன்படுத்த முடியும் எனத் கூறியுள்ளது.

News May 9, 2024

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்?

image

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு 5 நாள்கள் ஆகியும், தனிப்படை போலீசாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஜெயக்குமாரின் மகன்கள் உள்பட பலரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், சிபிசிஐடி அதிகாரி உடன் தனிப்படை போலீசார் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 9, 2024

ஒரே மாதிரியான PIN நம்பரை தேர்ந்தெடுக்கும் மக்கள்

image

பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் PIN நம்பரை யாருக்கும் பகிர வேண்டாம் என மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், 100இல் 27 பேர் ஒரே மாதிரியான PIN நம்பர்களை வைத்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, 1234, 0000, 1111, 1313, 2000, 7777, 2222, 1212, 1004, 4321, 1010, 6969, 2001, 1122, 5555, 3333, 6666, 4444, 1111, 8888, 9999 ஆகிய எண்களையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

News May 9, 2024

பரஸ்பர நிதி மீதான குடும்ப முதலீடு அதிகரிப்பு

image

2020-21ஆம் ஆண்டில் ₹64,084 கோடியாக இருந்த பரஸ்பர நிதி மீதான குடும்ப முதலீடு, 2022-23இல் 3 மடங்கு அதிகரித்து ₹1.79 லட்சம் கோடியாகவும், ₹1.07 லட்சம் கோடியாக இருந்த பங்குகள், கடன் பத்திரங்கள் மீதான குடும்ப முதலீடு, 2022-23இல் 2 மடங்கு உயர்ந்து ₹2.06 லட்சம் கோடியாகவும் அதிகரித்தது. அதேநேரம், குடும்பங்களுக்கு அளிக்கப்படும் வங்கிக் கடன் ₹6.05 லட்சம் கோடியில் இருந்து ₹11.88 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

News May 9, 2024

15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

News May 9, 2024

நாய் கடித்தச் சிறுமிக்கு அறுவை சிகிச்சை நிறைவு

image

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 5 வயது சிறுமியை 2 வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிறுமிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. சிறுமி நலமுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், வரும் செவ்வாய்க்கிழமை அவரை டிஸ்சார்ஜ் செய்யவுள்ளதாகத் தெரிவித்தனர்.

News May 9, 2024

இந்திய குடும்பங்களின் சேமிப்பு குறைந்தது

image

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் 3 ஆண்டில் நாட்டு மக்களின் குடும்ப சேமிப்பு குறைந்துள்ளதாக தேசியக் கணக்குப் புள்ளி விவரம் அறிவித்துள்ளது. 2020-21ஆம் ஆண்டில் நிகர குடும்ப சேமிப்புகள் ₹23.29 லட்சம் கோடியாக உச்சம் தொட்டது. ஆனால், அதன்பின் அந்த சேமிப்புகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2021-22இல் ₹17.12 லட்சம் கோடியாக சரிந்த சேமிப்புகள், 2022-23ஆம் ஆண்டில் மேலும் சரிந்து ₹14.16 லட்சம் கோடியாக உள்ளது.

News May 9, 2024

பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை?

image

வாகனங்களின் கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை ஒட்டத் தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி தாக்கல் செய்த அம்மனுவில், பேருந்துகளில் வணிக விளம்பரங்கள் செய்வதைத் தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

News May 9, 2024

மலர் டீச்சருக்கு பிறந்தநாள்

image

எந்த விதமான எதிர்பார்ப்போ, ஆர்பாட்டமோ இல்லாமல் ‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. முதல் படத்திலேயே தனது கள்ளமற்ற சிரிப்பு, முகபாவனைகளால் ‘மலர் டீச்சராக’ ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இந்நிலையில், இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!