News May 9, 2024

ஸ்திரமற்ற இந்தியாவை உருவாக்க அமெரிக்கா முயற்சி

image

ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் மூலம் ஸ்திரமற்ற இந்தியாவை உருவாக்க அமெரிக்கா முயற்சிப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவில் மத சுதந்திரத்தின் நிலையை கண்காணிக்க வேண்டுமென்று USCIRF என்ற அமைப்பு கூறியிருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், இந்திய உள் விவகாரங்களில் தலையிடும் வகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா கூறி வருகிறது எனக் கூறியுள்ளது.

News May 9, 2024

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ரியல் மாட்ரிட் அணி

image

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் – டார்ட்மண்ட் அணிகள் மோத உள்ளன. ஸ்பெயினில் இன்று நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் பேயர்ன் முனிச் – ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில், ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணி தரப்பில் ஜோசலு 2 கோல்களை அடித்து, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். பேயர்ட் முனிச் அணி சார்பில் அல்போன்சா 1 கோல் அடித்தார்.

News May 9, 2024

இளையராஜா வழக்கு புதிய டிரெண்டை உருவாக்கும்

image

காப்புரிமை வழக்கில் இளையராஜா, ஒரு புது டிரெண்டை உருவாக்கி இருப்பதாக இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார். ஒரு படத்தை தயாரிப்பாளர் பணம் போட்டு எடுத்தாலும், படத்தின் இசைக்கு சினிமோட்டோகிராஃப் ஃபிலிம் என்று அதற்குத் தனியாக காப்புரிமை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக தனது பாடல்களை வணிக நோக்கத்தில் பயன்படுத்த கூடாது என ப்ப்பப்ப்ப்ப்

News May 9, 2024

ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களே உஷார்..!

image

மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது. அதேவேளையில், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை 76 ஆயிரம் போலி இணைய தளங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதில் 8 லட்சம் பேர் மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். பெரும்பாலான மோசடிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நடந்துள்ளன. வங்கி அட்டை விவரங்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவை மோசடிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

News May 9, 2024

வெடி விபத்தில் பலி 7ஆக உயர்வு

image

சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகேவுள்ள செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதில் அங்கு பணிபுரிந்த 5 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

News May 9, 2024

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு சம்மன்

image

பாஜக தலைவர் நட்டாவுக்கு கர்நாடக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். எஸ்சி, எஸ்டி பிரிவு இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு அளித்து விட்டதாக பாஜக ஐடி பிரிவு வெளியிட்ட பதிவு குறித்து காங்கிரஸ் அளித்த புகாரின்பேரில், நடவடிக்கை எடுக்க காவல்துறையை EC கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, நட்டா, ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா மீது வழக்குப்பதிந்து 7 நாளில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

News May 9, 2024

இந்திய தேர்தலில் அமெரிக்கா தலையீடு?

image

மக்களவைத் தேர்தலில் அமெரிக்கா தலையிடுவதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதி பனூனை கொல்ல முயன்றதாக இந்தியாவின் “ரா” மீது அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. மதச் சுதந்திரம் உள்ளிட்ட விவகாரத்திலும் விமர்சிக்கிறது. இதை சுட்டிக்காட்டியுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், தேர்தலில் தலையிட அமெரிக்கா முயற்சிப்பதாகவும், இந்திய உள்விவகாரங்களில் தலையிடுவதாகவும் கூறியுள்ளது.

News May 9, 2024

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பலி

image

சிவகாசி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியாகினர். செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதில் அங்கு பணிபுரிந்த 3 பேர் உடல்சிதறி பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

News May 9, 2024

ரோஹித் கொல்கத்தா அணியில் விளையாட வேண்டும்

image

அடுத்த வருடம் மும்பை அணியில் ரோகித் விளையாட வாய்ப்பு இல்லை என பாக்., முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். அதில், கம்பீர் ஆலோசகராகவும், ஸ்ரேயாஸ் கேப்டனாகவும் உள்ள கொல்கத்தா அணியில் ரோகித் இணைந்து, ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்று, தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோஹித், 2024 ஐபிஎல் தொடருக்கு முன்பாக அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

News May 9, 2024

ஆட்சிக்கு வருவதை மோடியால் தடுக்க முடியாது

image

INDIA கூட்டணி ஆட்சி அமைப்பதை மோடியால் தடுக்க முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறாததை எல்லாம் மோடி இட்டுக்கட்டி பேசுவதாக கூறிய அவர், நாள்தோறும் நச்சுக்கருத்துக்களை பரப்புரை என்ற பெயரில் பிரதமர் செய்து வருவதாக விமர்சித்துள்ளார். முன்னதாக, பிரதமரின் பேச்சுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!