News May 9, 2024

கெட்ட வார்த்தை கூறி செல்வராகவன் திட்டினார்

image

செல்வராகவனின் நடவடிக்கையால் புதுப்பேட்டை படத்தில் இருந்து விலகியதாக காமெடி நடிகர் பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “புதுப்பேட்டை படத்தில் 2 நாட்கள் நடித்தேன். ஆனால், எனக்கு நடிக்க தெரியவில்லை எனக்கூறி, கெட்ட வார்த்தைகளில் செல்வராகவன் என்னை திட்டியதால் படத்தில் இருந்து வெளியேறினேன்” என்றார். மூத்த நடிகர்களில் ஒருவரான அவரின் இந்த பேச்சு, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

News May 9, 2024

ரூ.20,698 கோடி நிகர லாபம் ஈட்டிய எஸ்பிஐ

image

2023-24 Q4 காலாண்டில் எஸ்பிஐ வங்கி ரூ.20,698 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் இதே காலகட்டத்தில், ரூ.16,695 கோடியாக இருந்த நிகர லாபம் தற்போது 24 % உயர்ந்துள்ளது. அதேபோல் மொத்த வாராக்கடன் அளவு 2.78 சதவீதத்திலிருந்து 2.24 சதவீதமாக குறைந்துள்ளது. இதையடுத்து முதலீட்டாளர்களுக்கு ஈக்விட்டி பங்குக்கு 13.70 ரூபாயை டிவிடெண்ட் வழங்குவதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

News May 9, 2024

தமிழகத்தின் பல பகுதிகளில் கொட்டும் மழை

image

கோடை வெயில் தமிழகம் முழுவதும் சுட்டெரித்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது, இன்று காலை சென்னை உள்ள இடங்களில் மழை பொழிந்த நிலையில், தற்போது மேற்கு மற்றும் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கொடைக்கானல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

News May 9, 2024

கட்டாயம் கருத்தடை செய்ய வேண்டும்!

image

தமிழ்நாட்டில் மிகவும் ஆக்ரோஷமான நாய்களை வளர்க்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது வளர்ப்பு பிராணியாக உள்ள பிட்புல் டெரியர், தோசா இப்னு, அமெரிக்கன் புல் டாக், ராட்வீலர்ஸ் உள்ளிட்ட 23 வகை நாய் வகைகளை வைத்திருப்போர் உடனடியாக அவற்றுக்கு கட்டாயம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையென்றால், பொதுமக்கள் பாதுகாப்பைக் கருதி பறிமுதல் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

News May 9, 2024

பொதுமக்களுக்கு சிசிடிவி காட்சிகளை திரையிட்ட ஆளுநர்

image

மே.வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் மீது, ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக முதல்வர் மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆளுநர் மாளிகை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் 100 பேரை அழைத்து, ஏப் 24 முதல் மே 2 வரை ஆளுநர் மாளிகையில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆளுநர் திரையிட்டு காட்டினார்.

News May 9, 2024

காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரிப்பு

image

வெயில் வாட்டி வதைத்து வருவதால் உற்பத்தி குறைந்து வரத்து சரிந்ததால், தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.200ஆக உயர்ந்துள்ளது. வெண்டைக்காய் விலை கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது. கொத்தவரங்காய், முட்டைக் கோஸ் உள்ளிட்டவற்றின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை கண்டு இல்லதரசிகள் கவலையடைந்துள்ளனர்.

News May 9, 2024

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க ED கடும் எதிர்ப்பு

image

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தேர்தல் பரப்புரை என்பது ஒருவருக்கு அடிப்படை உரிமை அல்ல என ED கூறியுள்ளது. மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனு மீது, உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ள நிலையில், ஜாமின் வழங்க ED கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

News May 9, 2024

என் அப்பாவின் பெயரைக் காப்பாற்ற உழைத்தேன்

image

‘கையெத்தும் தூரத்து’ படம் தோல்வியடைந்தபோது, திரைத்துறையில் என்னை நிரூபித்துக் காட்ட வேண்டுமென்ற வேட்கை தனக்கு ஏற்பட்டதாக ஃபகத் ஃபாசில் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், என் அப்பா இயக்குநர் ஃபாசிலின் பெயரைக் காப்பாற்ற கடும் உழைப்பைச் செலுத்தத் தொடங்கினேன். இப்போது என் நடிப்பை மக்கள் கொண்டாடுவது ஆச்சரியத்தையும், மனமகிழ்வையும் அளிக்கிறது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்

News May 9, 2024

மருத்துவர்கள் ஸ்டிக்கர் ஒட்ட உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

image

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு வழக்கை மே 22க்கு ஒத்திவைத்துள்ளது. அவசர காலங்களில், இந்த தடை தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மே 2 முதல் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

கருகியது 1,000 ஏக்கர் வெற்றிலை பயிர்

image

போதிய நீரின்றி கரூர் மாவட்டத்தில் 1,000 ஏக்கர் வெற்றிலை கொடி கருகி வருகின்றன. தமிழகத்தில் வெற்றிலை அதிக சாகுபடி செய்யும் மாவட்டங்களில் கரூர் ஒன்று. அங்கு விளைவிக்கப்படும் வெற்றிலை, பல இடங்களுக்கு ஏற்றுமதியாகிறது. அண்மைக் காலமாக தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பாசனத்துக்கு போதிய நீரை செலுத்த முடியவில்லை. இதனால் 1,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட வெற்றிலை பயிர்கள் கருகியுள்ளன.

error: Content is protected !!