India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நாளை (ஜூலை 9) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. அதில், தமிழகத்திலும் ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனால், அத்தியாவசிய பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், பள்ளிகள் வழக்கம்போல் இயங்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இரவுக்குள் வெளியாகுமா?
2-வது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா கேப்டன் முல்டரின்(367) முச்சதத்தால் 626 ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா டிக்ளேர் செய்ததால் களமிறங்கிய ஜிம்பாப்வே 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாலோ ஆன் ஆனது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே 220 ரன்களில் ஆல் அவுட்டாகியது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
AR ரஹ்மானுக்கு பிறகு இந்தியாவில் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி. இவரின் தந்தையும், பாடலாசிரியருமான சிவ சக்தி தத்தா(83) வயது மூப்பால் காலமானார். தனது கவித்துவமான வரிகளை கொண்டு பாகுபலி, RRR உள்பட பல்வேறு படங்களுக்கு ஹிட் பாடல்களை அவர் எழுதியுள்ளார். சிவ சக்தி தத்தா மறைவுக்கு சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
சுக்கிர பகவான் இன்று (ஜூலை 8) ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்திருப்பதால் 5 ராசியினருக்கு நிதி நிலைமை மேம்படுமாம். *ரிஷபம்: திடீர் பண ஆதாயம் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு. *மிதுனம்: வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். *கன்னி: புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். *துலாம்: பண ஆதாயம் அதிகரிக்கும். *விருச்சிகம்: தொழில் வளர்ச்சி அடையும். செல்வம் பெருகும்.
கலையரசனை வைத்து அறிமுக இயக்குநர் சிவராஜ் இயக்கியுள்ள படம் டிரெண்டிங். இப்படம் ஒரு வ்லாகிங் செய்யும் தம்பதிகளை பற்றிய கதையாக அமைந்துள்ளது. வரும் 18-ம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே என்னிலே என்னிலே வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
பள்ளி வேன் விபத்தில் அக்கா, தம்பி உள்பட 3 மாணவர்கள் உயிரிழந்தது பேரதிர்ச்சி என்றால், ஒரு தந்தையின் கனவு சுக்கு நூறாக நொறுங்கிப் போனது பெருந்துயரம். மகள் சாருமதியை டாக்டராக்க வேண்டும் என்றும், மகன் செழியனை IAS அதிகாரியாக்க வேண்டும் எனவும் தந்தை திராவிட மணி ஆசையில் இருந்திருக்கிறார். அவருக்கு இப்போது கிடைத்திருப்பது கனவுகள் சிதைந்த 2 உடல்கள் மட்டுமே. RIP
காதில் இயற்கையாகவே உற்பத்தியாகும் மெழுகு போன்ற திரவம், நாளடைவில் கெட்டியாகி அதுவே வெளியே விழுந்துவிடும். ஆனால், பட்ஸ், குச்சி (அ) வேறு எதைக் கொண்டும் காதை குடையும்போது கொஞ்சம் தவறினாலும் செவிப்பறை சேதமடைய வாய்ப்புள்ளது. மேலும், காதுகேளாமை, குமட்டல் & வாந்தியுடன் கூடிய நாள்பட்ட தலைச்சுற்றல், சுவை குன்றுதல், ஏன் சில நேரம் முகத்தில் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் தந்தை தௌலால் வைஷ்ணவ் காலமானார். உடல் நலக்குறைவால் சில நாள்களாக ஜோத்பூர் எய்ம்ஸ் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிர் பிரிந்தது. ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த அவர், வழக்கறிஞராகவும் வருமான வரி ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார். அஷ்வினி வைஷ்ணவ் தந்தை மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கெர் கவுண்ட்டியில் மட்டும் சுமார் 84 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 32 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. பலரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்தியா- அமெரிக்கா இடையே நடந்துவரும் வர்த்தக பேச்சுவார்த்தை, இறுதிநிலையை எட்டியுள்ளது. இந்திய பொருள்கள் மீதான இறக்குமதி வரியை 26%-ஆக உயர்த்திய டிரம்ப், அதற்கு கொடுத்த 90 நாள் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், IND-USA இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு இரவு 10 மணிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதர 14 நாடுகளுக்கான வரி உயர்வு ஆக., 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.
Sorry, no posts matched your criteria.