India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரையிலான அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சேலம், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கக்கூடுமென்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தரம்சாலாவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. ஆர்சிபி அணியில் மேக்ஸ்வெல் இடம்பெறவில்லை. பஞ்சாப் அணியில் ரபாடாவுக்கு பதில் லிவிங் ஸ்டோன் சேர்க்கப்பட்டுள்ளார்.
மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் மோடியின் கைகளில் இருந்து நழுவிச் சென்று விட்டதாகவும், ஆதலால் மக்களின் கவனத்தை அடுத்த 4 அல்லது 5 நாள்களில் திசை திருப்ப மோடி முயல்வார் என்றும் கூறிய ராகுல் காந்தி, மத்தியில் INDIA கூட்டணி அரசு அமைந்ததும் 30 லட்சம் பேருக்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் வேலை வாய்ப்பு அளிக்கப்படுமென உறுதியளித்தார்.
தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளால், பல குடும்பங்கள் கண்ணீர் சிந்துகின்றன. தீபாவளிக்காகவும், ஏற்றுமதிக்காகவும், சிவகாசி பட்டாசு ஆலைகளில் இரவு பகலாக உற்பத்தி நடைபெறுகிறது. அங்கு போதிய வசதி இல்லாததாலும், கவனக்குறைவாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும், இழப்பீடு அறிவிப்பதும் வாடிக்கையாகி விட்டது. ஆனால் நிரந்தர தீர்வு காணப்படாததால் சொந்தங்களை இழந்து குடும்பத்தினர் தவிக்கின்றனர்.
சிவகாசி கீழத்திருத்தங்கல் தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் இறந்த செய்தியை கேட்டு வேதனையடைந்தேன். விபத்தில், காயமடைந்தவர்களுக்கு அனைத்து உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படும். மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி அம்மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா கடிதம் எழுதியுள்ளார். அதில், முதல்வர் நயாப் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சோம்பிர் உள்ளிட்ட 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் ஆளும் பாஜக அரசுக்கு தற்போது பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அப்படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு நடிகர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். 2015ஆம் ஆண்டு வெளியான உத்தமவில்லன் படத்தால் லிங்குசாமிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேறு ஒரு படத்தை நடித்து தருவதாக கமல் கூறியிருந்தார். உத்தரவாதம் அளித்து 9 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது கமல் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
பேட்டிங்கில் கவனம் செலுத்தும் பொருட்டு, கேப்டன் பொறுப்பில் இருந்து கே.எல்.ராகுல் விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SRH-க்கு எதிரான நேற்றைய போட்டியில் படுதோல்வி அடைந்த பிறகு கே.எல்.ராகுலிடம், லக்னோ அணியின் உரிமையாளர் கோயங்கா ஆவேசமாக பேசினார். 2022இல் ரூ.17 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர், 2025இல் நடக்கும் மெகா ஏலத்திற்கு முன்பு லக்னோ அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக செய்திகள் வந்தபடி உள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் மகன் ஜெப்ரினை மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் விசாரிக்க உள்ளனர். ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 9 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது. போலீசாருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களின் அடிப்படையில், தற்போது குடும்பத்தாரிடம் மீண்டும் விசாரிக்க உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.