India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடைபெற்று வரும் பெங்களூரு, பஞ்சாப் இடையேயான ஐபிஎல் போட்டி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் தரம்சாலாவில் நடைபெற்று வரும் போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 8.25 மணிக்கு போட்டி நிறுத்தப்படும்போது பெங்களூரு அணி 10 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரஜத் பட்டிதார் 55 ரன்களும், கோலி 42 ரன்களும் எடுத்துள்ளனர்.
பிரதமர் பதவி கைவிட்டுப்போகும் என்ற பயத்தில் மோடி, பல்வேறு வித்தைகளை காட்டி வருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஜூன் 4ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறிய அவர், பிரதமரின் பொய் பரப்புரைகளை அடையாளம் கண்டு, மக்கள் மோடியை புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மோடி மக்களுக்காக உழைப்பதை மறந்துவிட்டு அதானிக்காக சேவை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
சன் டிவியில் ஒளிபரப்பான அன்பே வா, பிரியமான தோழி ஆகிய சீரியல்கள் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து அம்பிகா, லிவிங்ஸ்டன் மகள் ஜோவிகா உள்ளிட்டோர் நடிப்பில் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற அருவி சீரியலும் நிறைவடையவுள்ளது. வரும் 11ஆம் தேதியுடன் அந்த சீரியல் நிறைவடைகிறது. மேலும் வருகிற 13ஆம் தேதி முதல் மாலை 6.30 மணிக்கு தினமும் ராமாயணம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
பொன்னமராவதி அருகே இன்று ஒரே நாளில் 15 பேரை நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொக்கநாதபட்டியில், தெரு நாய்கள் அப்பகுதியில் சென்றவர்களை விரட்டி கடித்ததில் பலர் காயமடைந்தனர். சென்னையில் சிறுமி ஒருவரை வளர்ப்பு நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்று நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (AIE) ஊழியர்கள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். விஸ்தாரா ஏர்லைன்ஸுடன் AIE-ஐ இணைப்பதை எதிர்த்து போராட்டத்தில் குதித்த ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் AIE நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில், இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 25 மூத்த ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவை அந்நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.
ஹரியானாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், ஆதலால் ஆட்சியில் நீடிக்கும் தார்மிக உரிமையை இழந்து விட்டதாகவும் கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு, புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், சத்ய பிரதா சாஹூ ஆலோசனை நடத்தியுள்ளார். வாக்கு எண்ணிக்கை நாளில் செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள், மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை கதவின் முன்பு, கூடுதலாக ஒரு சிசிடிவி கேமராவை பொருத்தவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
1950 – 2015 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை 7.82% சரிந்துள்ளதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தெரிவித்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், இந்திய மக்கள் தொகையில், இந்துக்களின் எண்ணிக்கை 84.68 சதவீதத்தில் இருந்து 78.06% ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 7.84 சதவீதத்திலிருந்து 14% ஆக அதிகரித்து, 43% வளர்ச்சி பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆபாச கருத்துகள் அதிகமாக வெளியிடும் யூடியூப் சேனல்களில் நேர்காணல் செய்பவர்கள் A1 குற்றவாளியாக வரிசைப்படுத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. காவலர்களை ஆபாசமாகப் பேசிய வழக்கில் RedPix பெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமின் கோரியிருந்தார். அம்மனுவை விசாரித்த நீதிமன்றம், தற்போது தொல்லையாக மாறிவிட்ட யூடியூப் சேனல்களின் செயல்பாடுகளை அரசுகட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கீழ்கண்ட யோசனைகள் மூலம் தீர்வு காணலாம். *ஆலைக்கு அனுமதி வழங்கும் முன்பு, உற்பத்தி விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என சோதிக்க வேண்டும் *விரிவான இட வசதியை உறுதிப்படுத்த வேண்டும் *பெண்கள், வயதானோர் பணிபுரிய கட்டுப்பாடு விதிக்க வேண்டும் *ஆலை இருக்கும் பகுதிகளில் மீட்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
Sorry, no posts matched your criteria.