News May 9, 2024

பஞ்சாப் அணிக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி

image

பஞ்சாப் அணிக்கு ஆர்சிபி அணி 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. ரஜத் பட்டிதார் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கோலி 47 பந்துகளில் 92 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய கேமரூன் க்ரீன் 46 ரன்களை விளாசவே, 20 ஓவர் முடிவில் ஆர்சிபி 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது.

News May 9, 2024

ராபர்ட் வதேரா ராஜ்யசபா சீட்டுக்கு குறிவைக்கிறாரா ?

image

நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்; அதனை ராஜ்யசபா உறுப்பினராகக் கூட செய்யலாம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், எதிரணியில் உள்ளவர்களுக்கு பதிலடி கொடுக்க அரசியலுக்கு வருவதில் விருப்பமில்லை அமேதி, ரேபரேலி என எங்கு சென்றாலும், நான் தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் எனக் கூறினார்.

News May 9, 2024

நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை

image

சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில் அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம்‌ எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில்‌ தங்கத்தை பிரதிபலிப்பதால், நாளை தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது. ஆதலால் மக்களை ஈர்க்க நகைக்கடைகள் பல சலுகைகளை அறிவித்துள்ளன.

News May 9, 2024

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு நாளை வெளியீடு

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. காலை 9.30 மணிக்கு tnresults.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடவுள்ளது. ரோல் நம்பர், அட்மிட் அட்டையில் உள்ள பிறந்தத் தேதியை உள்ளிட்டு தேர்வு முடிவை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் குறித்த செய்திகள், Way2newstamil செயலியிலும் துல்லியமாக உடனுக்குடன் வெளியிடப்படவுள்ளது.

News May 9, 2024

இந்தியாவை இஸ்லாமிய நாடாக INDIA கூட்டணி மாற்றும்

image

காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி கட்சிகள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற துடிப்பதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இந்துக்களின் எண்ணிக்கை 7.8% சரிந்துள்ளதாக PM – EAC ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர், வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் தலைவர்கள் செய்த (சிறுபான்மையினரை) திருப்திப்படுத்தும் அரசியலால் இந்துக்களின் மக்கள்தொகை குறைந்தது எனக் கூறியுள்ளார்.

News May 9, 2024

அரைசதம் விளாசிய கையோடு அவுட்டானார் ரஜத் படிதார்

image

பஞ்சாப் அணிக்கு எதிரான 58ஆவது லீக் போட்டியில் அரைசதம் விளாசிய RCB அணி வீரர் ரஜத் படிதார் அடுத்த பந்திலேயே விக்கெட் இழந்துள்ளார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ரஜத் படிதார், 23 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 55 ரன்களை குவித்தார். RCB அணியின் ரன் ரேட்டிங்கை உயர்த்த தொடர்ந்து அடித்து ஆடி வந்த அவர், பஞ்சாப் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சாம் கர்ரன் வீசிய பந்தில் கேட்ச் அவுட்டானார்.

News May 9, 2024

ராயன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

image

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ராயன் திரைப்படம், தனுஷின் 50ஆவது படமாகும். இப்படம், வரும் ஜூன் 13ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தில் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் என 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில், அடங்காத அசுரன் எனும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

News May 9, 2024

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கோலி அரை சதம்

image

பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் கோலி அரைசதம் விளாசினார். தரம்சாலாவில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. மறுமுனையில் விக்கெட் சரிந்த போதிலும் தொடக்க ஆட்டக்காரரான கோலி நிலைத்து நின்று, 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்

News May 9, 2024

ஹர்திக் பாண்டியா மீது வீரர்கள் கடும் அதிருப்தி?

image

ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை கோப்பையை வென்ற MI அணி நடப்பு தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை. இதற்கு கேப்டன்ஸி மாற்றம் & ஹர்திக் பாண்டியாவின் நடவடிக்கைகளே முக்கிய காரணமென்று அதிருப்தியில் உள்ள மற்ற MI வீரர்கள் கருதுவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. DC அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பாண்டியாவிடம் திலக் வர்மா வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

வேகத்தடை: மின்கம்பங்களை அகற்ற ஆணை

image

வேகத் தடை அருகிலுள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி, வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம், மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலைதடுமாறி, மின்கம்பங்கள் மீது மோதி 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை அகற்ற தலைமை செயலாளர் உத்தரவிட்ட நிலையில், அனைத்து அதிகாரிகளுக்கும் மின்வாரியம் ஆணையிட்டுள்ளது.

error: Content is protected !!