News May 9, 2024

எலுமிச்சை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயம்…

image

எலுமிச்சையின் நிறம் அதன் வகையைப் பொறுத்து மாறுபடும், பழுத்த எலுமிச்சை பொதுவாக பிரகாசமான மஞ்சள் தோலைக் கொண்டிருக்கும். எலுமிச்சை மிகவும் கடினமாக உணர்ந்தாலோ அல்லது அதிகப்படியாக உலர்ந்து காணப்பட்டாலோ அவற்றை தேர்ந்தெடுக்க வேண்டாம். சுருக்கம் அல்லது மென்மையான புள்ளிகள் கொண்ட எலுமிச்சையை தவிர்க்கவும், ஏனெனில் அவற்றில் அதிக சாறு இருக்காது. முடிந்தவரை ஆர்கானிக் எலுமிச்சையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

News May 9, 2024

அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்

image

இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றும் வாய்ப்புக்காக காத்திருப்பதாக ஆஸி. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறேன். எனக்கு பயிற்சியாளர் பணி பிடிக்கும். உலகின் சிறந்த வீரர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். அதற்கு இந்திய அணி மிகவும் பொருத்தமானது” எனக் கூறியுள்ளார்.

News May 9, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

*மேஷம் – திட்டமிட்ட அணுகுமுறை தேவை *ரிஷபம் – சாதகமான பலன்*மிதுனம் – முக்கிய முடிவுகளை தவிர்க்கவும்*கடகம் – அமைதியான நாள் *சிம்மம் – சாதகமான நாள்*கன்னி – வெற்றி நிச்சயம் *துலாம் – எச்சரிக்கை தேவை *விருச்சிகம் – வெற்றிக்கு அடிகோலும் நாள் *தனுசு – எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும் *மகரம் -எதிர்மறை எண்ணங்களை தவிர்த்தல் நலம் *கும்பம் -அமைதியாக இருப்பது நல்லது*மீனம் – சாதகமான நாள்

News May 9, 2024

டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

image

டி20 உலக்கோப்பையில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து மீண்டுள்ள ஹசரங்கா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குசல் மெண்டிஸ், பதும் நிஷங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, மதீஷா பதிரானா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளார்கள். அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 6ஆவது முறையாக டி20 உலக்கோப்பையில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்

image

டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டை பொறுத்த வரையில் மிக சரியான திட்டமிடலுடன் சஞ்சு சாம்சன் இருப்பதாக தெரிவித்த அவர், இந்திய அணியில் முக்கிய இடத்தை விரைவாக பிடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் 11 ஆட்டங்களில் விளையாடி 471 ரன்களை அவர் எடுத்துள்ளார்.

News May 9, 2024

இரவில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்

image

தமிழகத்தில் இன்று இரவு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சேலம், ஈரோடு, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களின் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

News May 9, 2024

முட்டை விலை மீண்டும் உயர்வு

image

நாமக்கலில் முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்ந்து, ஒரு முட்டை ₹.5.80 ஆக விற்கப்படுகிறது. கடந்த 3 நாள்களாக ₹.5.70 என்ற விலையில் முட்டை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. 30 முட்டை கொண்ட ஒரு அட்டை ₹.174க்கும், பெட்டி ₹.1218க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாள்களில் முட்டை விலை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கறி கோழி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News May 9, 2024

பிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்

image

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

News May 9, 2024

பாஜக வென்றால் முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்து: அமித்ஷா

image

பாஜக வெற்றி பெற்றால் தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 4% இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். மோடி மீண்டும் பிரதமரானால் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார் என்று காங்கிரஸ் பொய் குற்றச்சாட்டை தெரிவிப்பதாக கூறிய அவர், பெரும்பான்மை பலத்துடன் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சி செய்தும் இடஒதுக்கிட்டை ரத்து செய்யவில்லை என்றார். தெலங்கானாவில் மே 13இல் தேர்தல் நடைபெறுகிறது.

News May 9, 2024

ஐபிஎல்லில் கோலி புதிய சாதனை

image

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், 92 ரன்களை விராட் கோலி குவித்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அவர் 600 ரன்களுக்கும் மேல் 4ஆவது முறையாக குவித்தார். ஏற்கெனவே கே.எல் ராகுல் 4 முறை 600 ரன்களுக்கும் மேல் விளாசி சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போது அவருடன் அந்த சாதனையை கோலி பகிர்ந்து கொண்டுள்ளார்.

error: Content is protected !!