News May 10, 2024

வெடி விபத்துக்கு காரணம் இதுதான்

image

சிவகாசி அருகே பட்டாசு ஆளை வெடிவிபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின் பேசிய அவர், பேராசை காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என்றார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்படும் என்றார். நேற்று நடைபெற்ற இந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர்

image

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் மே 3ஆம் தேதி வெளியான ‘அரண்மனை 4’படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது. ரஜினி நடிப்பில் வெளியான லால் ஸலாம் 30 கோடி மட்டுமே வசூலித்திருந்த நிலையில், அதை அந்த சாதனையை ஒரு வாரத்தில் தகர்த்துள்ளது அரண்மனை. அதுமட்டுமின்றி இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் படமாகவும் இது உள்ளது. விரைவில் இப்படம் 100 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 10, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News May 10, 2024

தரம்சாலா மைதானத்தில் இதுவே அதிகபட்ச ரன்

image

தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 241/7 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் RCB பல சாதனைகளை படைத்துள்ளது. இது ஐபிஎல் வரலாற்றில் RCB அணி அடிக்கும் நான்காவது அதிகபட்ச ரன்னாகும். அதுமட்டுமின்றி தரம்சாலா மைதானத்தில் ஒரு அணி எடுக்கும் அதிகபட்ச ரன் இதுவாகும். இப்போட்டியில் RCB அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News May 10, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News May 10, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

* வேகத் தடை அருகிலுள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்ற தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது.
* கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை 7.82% சரிந்துள்ளது.
* மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது அளித்தது.
* சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

News May 10, 2024

முருகன் எப்படி இருக்க வேண்டும்?

image

சேலம் அருகே உள்ள தாரமங்கலத்தில் அமைந்திருக்கும் இந்த முருகர் சிலைதான் சமூக வலைதளத்தின் இன்றைய ஹாட் டாக். அழகை பெயரிலேயே கொண்ட முருகனை அவலட்சனமாக சித்தரிப்பதாக சிலர் வேதனை தெரிவிக்கின்றனர். அதேநேரம், முருகன் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இந்த விவகாரம் தொடர்பான உங்களது கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்க.

News May 10, 2024

IPL: பெங்களூரு அபார வெற்றி

image

தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த RCB 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. பின்னர் 242 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய PBKS 18 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் RCB ப்ளே ஆப் வாய்ப்பைத் தக்க வைத்துள்ளது.

News May 10, 2024

அமெரிக்காவின் முடிவு கவலையை அளிக்கிறது

image

தெற்கு காசாவில் உள்ள ரபா பகுதியை இஸ்ரேல் கைப்பற்றினால், இனி அமெரிக்கா ஆயுத உதவிகளை வழங்காது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐ.நா சபைக்கான இஸ்ரேலின் தூதர் கிலாட் எர்டன், “அமெரிக்காவின் இந்த முடிவு தீவிரவாத ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராக போராடும் இஸ்ரேலுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது” என வேதனையுடன் கூறியுள்ளார்.

error: Content is protected !!