India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶மே – 10, சித்திரை – 27 ▶கிழமை – வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM, 4:30PM – 5:30PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM, 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை நேரம்: 7:30 AM – 9:00 AM ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶திதி: த்ரிதியை
நேற்று சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் அவர், 10 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்ததாகவும், எண்ணங்கள் முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொளுத்தும் வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள். தாகமாக இல்லாவிட்டாலும், குழந்தைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, பழச்சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களையும் அதிகமாகக் கொடுக்கலாம். குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்றால், பருத்தியாலான ஆடைகள், தொப்பி, கண்ணாடி போன்றவற்றை அணிவியுங்கள்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மத்திய அரசு நேற்று பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. இந்த விருதை விஜயகாந்த் சார்பாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று பெற்றுக்கொண்டார். இந்நிலையில், விருதினைப் பெற்ற பிரேமலதாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜயகாந்த், பிரேமலதாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் அவர் X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
* தன் எதிரிகளை வெல்பவனை விட, தன் ஆசைகளை வெல்பவனே தைரியமானவன் என்று நான் எண்ணுகிறேன்.
* அனுபவம் வாய்ந்த இளைஞர்கள் என்று யாருமே இல்லை. காலமே அனுபவத்தை உருவாக்குகிறது.
* அமைதி போரை விட மிகவும் கடினமானது.
* உங்கள் மகிழ்ச்சி உங்களை மட்டுமே சார்ந்துள்ளது.
* கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் அதன் பழங்கள் இனிப்பானவை.
கடந்த ஓணம் பண்டிகைக்கு வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூலித்த மலையாளப் படம் “ஆர்டிஎக்ஸ்”. இப்படத்தின் இயக்குநர் நிகாஷ் ஹிதாயத் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் அன்பறிவ் மாஸ்டர்கள் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளனர். வேட்டையன் படப்பிடிப்பில் இருந்த ரஜினியை அவர்கள் நேரில் சென்று சந்தித்துள்ளனர். முன்னதாக ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படக்குழுவினரும் ரஜினியை சந்தித்திருந்தனர்.
கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள நீட் தேர்வு மையத்தில் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீட் தேர்வில் உதவுவதாகக் கூறி, மாணவர்களிடம் ரூ.10 லட்சம் வரை பேரம் பேசியுள்ளனர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இவர்களைக் கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
* 1612 – ஷாஜகான் மும்தாஜைத் திருமணம் செய்தார்.
* 1857 – சிப்பாய் கலகம் துவங்கியது.
* 1946 – ஜவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
* 1994 – நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்.
* 1908 – அன்னையர் தினம் முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது. * குழந்தைகள் நாள் (மாலத்தீவுகள்)
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 92 ரன்கள் அடித்த பெங்களூரு வீரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான 1,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக கோலி சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிராகவும் 1000 ரன்களைக் கடந்துள்ளார். இதன் மூலம் அதிக அணிகளுக்கு (3) எதிராக 1,000+ ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 144 ▶குறள்: எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். ▶பொருள்: பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.
Sorry, no posts matched your criteria.