News May 10, 2024

ஆண்கள் vs பெண்கள் : 10th ரிசல்ட்டில் யார் டாப்?

image

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை போலவே, மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,47,061 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 4,22,591 (94.53% ) பேர், 4,47,203 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 3,96,152 (88.58%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5.95% மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 10, 2024

10ஆம் வகுப்பில் 91.55% பேர் தேர்ச்சி

image

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 8,94,264 ஆகும். இதில், 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.58 சதவீதம். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.53 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 0.016% தேர்ச்சி அதிகரித்துள்ளது.

News May 10, 2024

BREAKING: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது

image

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. மாணவர்கள் dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்களின் செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவு அனுப்பப்படும். 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர்.

News May 10, 2024

‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்

image

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இதில், நடிகர் அஜித் 3 வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க உள்ளார். முதல்கட்ட படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதால், ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.

News May 10, 2024

சென்னை திரும்பிய பெங்களூரு விமானங்கள்

image

பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பெங்களூரு செல்ல வேண்டிய 10 விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், டெல்லி, மும்பை, கோவாவில் இருந்து சென்ற விமானங்கள் சென்னையில் தரையிறங்கின. தொடர்ந்து, இன்று அதிகாலை வானிலை சீரடைந்ததும், 10 விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டுச் சென்றன.

News May 10, 2024

பர்பிள் கேப்பை கைப்பற்றினார் ஹர்ஷல் பட்டேல்

image

பெங்களூருவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், PBKS வீரர் ஹர்ஷல் பட்டேல் அபாரமாக பந்து வீசியுள்ளார். 4 ஓவர்கள் வீசிய அவர் 38 ரன்கள் கொடுத்து, கேமரன் க்ரீன், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான (20) பர்பிள் கேப்பை கைப்பற்றியுள்ளார். 18 விக்கெட்டுகள் கைப்பற்றி பும்ரா 2ஆம் இடத்தில் உள்ளார்.

News May 10, 2024

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் இருவர் கைது

image

சிவகாசி அருகே கீழ திருத்தங்கலில் நேற்று ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 10 உயிர்களை பலி கொண்ட இவ்விவகாரத்தில், ஆலையின் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, இன்று காலை ஆலையின் ஒப்பந்ததாரர் முத்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

News May 10, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை 2 முறை உயர்வு

image

அட்சய திருதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 2 முறை உயர்ந்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹360 உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் ₹360 அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹720 உயர்ந்து ₹53,640க்கும், கிராமுக்கு ₹90 உயர்ந்து ₹6,705க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1.30 உயர்ந்து ₹90க்கும், கிலோவிற்கு ₹1,300 உயர்ந்து ₹90,000க்கும் விற்கப்படுகிறது.

News May 10, 2024

நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 362 விமான பயணிகள்

image

சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானம், இயந்திரக் கோளாறு காரணமாகக் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அனைத்து சோதனைகளும் முடிந்து 362 பயணிகளும் விமானத்தில் அமர்ந்திருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓட தயாராக இருந்த நிலையில், இயந்திரத்தில் கோளாறு இருந்ததை விமானிகள் கண்டறிந்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனால், விமான ஊழியர்கள் உட்பட 376 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

News May 10, 2024

எண்ணிக்கையை விட தரமே முக்கியம்: கோலி

image

நமக்கு நாமே நேர்மையாக இருப்பது தான் போட்டியில் முன்னோக்கி செல்வதற்கான ஒரே வழி என RCB வீரர் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், “என்னைப் பொறுத்த வரை எண்ணிக்கையை விட தரமே முக்கியம். இப்போதும் ஒரு பேட்ஸ்மேனாக முன்னேறுவதை லட்சியமாகக் கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் எங்களுக்கு தோல்விகள் இருந்தன. இந்த வெற்றிகளால் எங்களுடைய தன்னம்பிக்கை திரும்பியுள்ளது” எனக் கூறினார்.

error: Content is protected !!