India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. 7,491 மேல்நிலைப் பள்ளிகள், 5,134 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 12,625 பள்ளிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் மாநிலம் முழுவதும் 4,105 பள்ளிகளும், 1364 அரசுப் பள்ளிகளும் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்தாண்டை விட, இம்முறை மாநிலம் முழுவதும் 387 பள்ளிகளும், 338 அரசுப் பள்ளிகளும் கூடுதலாக 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
மாணவிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 94.66%ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 94.53%ஆக குறைந்துள்ளது. அதேநேரம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.16%இல் இருந்து 88.58%ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான தேர்ச்சி விகித இடைவெளி 6.50%இல் இருந்து 5.95%ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 82.07% குறைந்த தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே வேலூர் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து, 2) ராணிப்பேட்டை – 85.48%, 3) திருவண்ணாமலை – 86.10%, 4) திருவள்ளூர் – 86.52%, 5) கள்ளக்குறிச்சி – 86.83%, 6) செங்கல்பட்டு – 87.38%, 7) காஞ்சிபுரம் – 87.55%, 8) திருப்பத்தூர் – 88.20%, 9) சென்னை – 88.21%, 10) நாகப்பட்டினம் – 89.70% தேர்ச்சி பெற்றுள்ளன.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், வேலூர் மாவட்டம் 82.07% தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே கடைசி இடத்தில் உள்ளது. இங்கு 18,357 பேர் தேர்வெழுதிய நிலையில், 15,066 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 9,104 பேரும், மாணவிகள் 9,253 பேரும் தேர்வெழுதிய நிலையில், 6,885 மாணவர்களும் (75.63%), 8,181 மாணவிகளும் (88.41%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் 84.68%, மாநகராட்சி பள்ளிகள் 84.47%, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் 91.75% தேர்ச்சி பெற்றுள்ளன. வனத்துறை பள்ளிகள் 90.91%, நகராட்சி பள்ளிகள் 86.13%, சமூக நலத்துறை பள்ளிகள் 86.55%, பழங்குடியின பள்ளிகள் 92.45% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் ஆதிதிராவிடர், மாநகராட்சி, சமூக நலத்துறை, பழங்குடியின பள்ளிகளின் தேர்ச்சி கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.
▶அரியலூர் – 97.31%
▶சிவகங்கை – 97.02%
▶ராமநாதபுரம் – 96.36%
▶கன்னியாகுமரி – 96.24%
▶திருச்சி – 95.23%
▶விருதுநகர் – 95.14%
▶ஈரோடு – 95.08%
▶பெரம்பலூர் – 94.77%
▶தூத்துக்குடி – 94.39%
▶விழுப்புரம் – 94.11%
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. இதில், அரியலூர் மாவட்டம் 97.31% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், அரசுப் பள்ளிகளுக்கான தரவரிசையிலும் 96.20% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு பெரம்பலூர் மாவட்டம் 97.67% தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 87.90%, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 91.77%, தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்கள் 97.43% தேர்ச்சி பெற்றுள்ளனர். இருபாலர் பள்ளிகளில் 91.93%, பெண்கள் பள்ளிகளில் 93.80%, ஆண்கள் பள்ளிகளில் 83.17% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில், பாடவாரியாக சதமடித்த மாணவர்கள் விவரம் வருமாறு, தமிழ் – 8 பேர் சதம் எடுத்துள்ளனர். ஆங்கிலம் – 415 பேர், கணிதம் – 20,691 பேர், அறிவியல் 5,104 பேர், சமூக அறிவியல் – 4,428 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்.
* தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் 96.85%
* ஆங்கிலம் 99.15%
* கணிதம் 96.78%
* அறிவியல் 96.72%
* சமூக அறிவியல் 95.74%
Sorry, no posts matched your criteria.