India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில், கே.எல்.ராகுல் கேப்டனாக தொடர்வார் என LSG அணியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். SRH-க்கு எதிரான போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் LSG படுதோல்வி அடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த அணியின் உரிமையாளர், கே.எல்.ராகுலை சரமாரியாக திட்டினார். இதனால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகப் போவதாகத் தகவல் பரவிய நிலையில், அவர் கேப்டனாகவே தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோனிக்கு மாற்றாக வேறு கீப்பர் அணியில் இருந்தாலும், அவர் தோனி ஆகிவிட முடியாது என CSK பயிற்சியாளர் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார். காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது என்றும், அதனால் தான் 2-4 ஓவர்கள் மட்டும் பேட்டிங் செய்துவிட்டு முழுநேரம் கீப்பிங் செய்து கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், களத்தில் தோனி நிச்சயம் வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானை மதிக்காவிட்டால், அந்நாடு நம் மீது அணுகுண்டு வீசும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அவர், பாகிஸ்தான் உடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார். மாறாக, அண்டை நாடுகளை மதிக்காமல் ராணுவ பலத்தை காட்ட நினைத்தால், பதற்றம்தான் ஏற்படும் எனக் கூறிய அவர், பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பதாக எச்சரித்தார்.
பஞ்சாப்பிற்கு எதிரான ஐபில் போட்டியில், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் புதிய சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில், 1 Four, 2 Six என விளாசி 7 பந்துகளில் 18 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் ஐபிஎல் வரலாற்றில், பெங்களூரு அணிக்காக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் வரிசையில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 912* ரன்கள் குவித்து, முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை (898) பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
அமெரிக்காவில் கடுமையான சூரிய காந்த புயல் ஏற்படவுள்ளதாக வளிமண்டல ஆய்வகம் எச்சரித்துள்ளது. இன்று முதல் நாளை இரவு வரை கலிபோர்னியா – தெற்கு அலபாமா வரை அரோரா காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படலாம் எனவும், செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் முடங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 19 ஆண்டுகளில் ஏற்பட்ட காந்த புயலை விட இது ஆபத்தானது எனவும் கூறப்படுகிறது.
நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதர பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 – 40 கி.மீ., வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இம்பேக்ட் பிளேயர் விதி, சோதித்துப் பார்க்கப்பட்டதே தவிர நிரந்தரம் அல்ல என BCCI செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்த விதியால் 2 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும், உலகக் கோப்பை முடிந்தவுடன் இந்திய கேப்டன், வீரர்கள், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடி விதியை தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும்” எனக் கூறினார்.
காஞ்சிபுரம் கைத்தறி பட்டு கூட்டுறவுச் சங்கங்களில் விற்பனை குறைந்ததால், ₹110 கோடி மதிப்பிலான பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், 65% தள்ளுபடியில் விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கைத்தறி சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஜரிகை உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களால் சேலைகளின் விலை உயர்ந்துள்ளதால், மக்களிடையே வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், வரும் திங்கள் கிழமை முதல் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பில் அதிக மார்க் எடுத்த மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவை கொடுக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முதல் குரூப், சயின்ஸ் குரூப், 3-வது குரூப்பிற்கு கடும் போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘இந்தியன் 2’ படத்தின் வெளியீடு தள்ளிப் போகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தனுஷின் ‘ராயன்’ திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும், படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் கால அவகாசம் அதிகம் தேவைப்படுகிறது. அதனால், இந்தியன் 2 படத்தின் வெளியீட்டை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.