India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே 11ஆம் தேதி 8 மாவட்டங்களிலும், மே 12ஆம் தேதி 9 மாவட்டங்களிலும், மே 13ஆம் தேதி 10 மாவட்டங்களிலும், மே 14ஆம் தேதி 8 மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்திய அணிக்காக விளையாட ஒவ்வொரு போட்டியிலும் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவுக்காக விளையாட உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாட வேண்டும். இந்திய அணியில் இடம்பிடிக்காத இஷான் கிஷன் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் MI அணியில் விளையாடலாம். இது அறிவுரையல்ல; நட்பின் அடிப்படையில் சொல்கிறேன்” எனக் கூறினார்.
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியிருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என டெல்லி அமைச்சர் அதிஷி கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு, மடிந்து போன ஜனநாயகத்தை மீண்டும் மீட்பதற்கான தொடக்கம் என்ற அவர், நீதியின் பக்கம் நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கெஜ்ரிவாலுக்கு 21 நாள் இடைக்கால ஜாமினை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது.
மாலத்தீவில் இருந்த இந்தியப் படைகள் முழுவதும் வாபஸ் பெறப்பட்டுவிட்டது. மாலத்தீவுக்கு இந்தியா பரிசாக அளித்த 2 ஹெலிகாப்டர்கள், டோர்னியர் விமானம் ஒன்றை இயக்க 90 இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களை மே 10க்குள் வெளியேற மாலத்தீவு அதிபர் மொய்சூ வலியுறுத்தியதை அடுத்து, 90 வீரர்களும் வெளியேறி விட்டதாகவும், அவர்களுக்கு பதில் தொழில்நுட்ப குழு பணியில் உள்ளதாகவும் மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகளில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தென் நார்வேயின் வடக்கு கடலுக்குள் 5 மீட்டர் ஆழத்தில் ‘அண்டர்’ என்ற மிகப்பெரிய ஆழ்கடல் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய அந்த உணவகத்தில், 18 வகையான கடல் உணவு & மதுபானம் அடங்கிய ஒரு காம்போவின் விலை ₹30 ஆயிரமாம்.
உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தையில் நடிகர் கமல் பங்கேற்கவில்லை. 2015ஆம் ஆண்டு வெளியான உத்தமவில்லன் படத்தால் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, வேறு ஒரு படத்தை நடித்து தருவதாக கமல் கூறியிருந்தார். உத்தரவாதம் அளித்து 9 ஆண்டுகள் ஆன நிலையில், இது தொடர்பாக லிங்குசாமி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே 15 – 20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு மையத்திற்குச் சென்றும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் ₹275 கட்டணம்.
பாகிஸ்தானை காட்டி இந்தியாவை காங்கிரஸ் மிரட்டுவதாக பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக கூறி மிரட்டுவதாகவும், ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் குறித்து பேசுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் அளித்த உச்சநீதிமன்றம், பல நிபந்தனைகளை விதித்துள்ளது * ₹50,000 பிணைத் தொகை செலுத்த வேண்டும் *முதல்வர் அலுவலகம், தலைமைச் செயலகம் செல்லக் கூடாது *துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் பெற அவசியம் எழாத பட்சத்தில், அரசு கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது *வழக்குத் தொடர்பான கோப்பை கையாளக் கூடாது *வழக்கு குறித்து பேசக் கூடாது * சாட்சிகளிடம் பேசக் கூடாது
கிரிக்கெட் வீரர் ஒப்பந்த பட்டியலில் இருந்து இசான் கிஷண், ஸ்ரேயஸ் அய்யரை நீக்கியது தேர்வுக் குழுத் தலைவர் அகர்கர்தான் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் விளையாடாததை சுட்டிக்காட்டி, 2 பேரும் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதுகுறித்து பேசிய ஜெய் ஷா, 2 பேரை நீக்கும் முடிவை எடுத்தது அகர்கர்தான், அதை செயல்படுத்துவது தனது பணி என்றார்.
Sorry, no posts matched your criteria.