India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மருத்துவ உலகில் முதல்முறையாக ஜீன் தெரபி (மரபணு) மூலம் பிரிட்டன் சிறுமிக்கு காது கேட்கும் திறன் கிடைத்துள்ளது. சிறுமி ஓபல் சாண்டிக்கு பிறக்கும் போதே காது கேட்கும் திறன் இல்லை. பரிசோதனை அடிப்படையில், ஜீன் தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆபத்தில்லா வைரஸ், மரபணு ஆகியவை கொண்ட கலவை, சிரிஞ்ச் மூலம் காதுக்குள் செலுத்தப்பட்டது. இதில் சேதமடைந்த செல்கள் சரியாகவே, காது கேட்கும் திறன் கிடைத்தது.
Go Digit நிறுவனத்தில் முதலீடு செய்த கோலி & அனுஷ்காவுக்கு 263% லாபம் கிடைத்துள்ளது. விரைவில் Go Digit நிறுவனம் ஐபிஓ பங்குகளை வெளியிட உள்ளது. இதில், கோலி தம்பதியினர் 2020இல் ஒரு யூனிட் ₹.75 என்ற விலைக்கு 2,66,667 பங்குகளை வாங்கியிருந்தனர். தற்போது, ஒரு யூனிட் ₹.272 என்ற நிலையில், அவர்கள் ₹.7 கோடி லாபம் அடைந்துள்ளனர். எனினும், கோலி தங்களின் பங்குகளை ஐபிஓவில் தற்போது விற்க முன்வரவில்லை.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சிதம்பரம் தொகுதியில் தன்னை ஆதரித்து பரப்புரை செய்ததற்காக திருமாவளவன் அவருக்கு நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பில், விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளரும், தற்போதைய எம்.பியுமான ரவிக்குமாரும் உடன் இருந்தார்.
நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக் லெவிடேசன் தடத்தில் மிதந்து செல்லும் வடிவில் மேக்னடிக் ரோபோட் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலியை இந்திய அணி நிர்வாகம் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “விராட் கோலி மிகவும் அருமையாக விளையாடுகிறார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், குறைந்த பந்துகளில் 90 ரன்களை அவர் அடித்தார். ஐபிஎல் தொடரில் அவரது கடைசி சில இன்னிங்ஸ்கள் மிகச் சிறப்பானதாக இருந்தது” என்றார்.
பயனர்கள் அடிப்படையில் கடந்த மாதத்திற்கான டாப் 10 சமூக வலைதளங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, 38.95% பயனாளர்களுடன் பேஸ்புக் முதலிடம் பிடித்துள்ளது. X தளம் – 16.36%, இன்ஸ்டாகிராம் – 15.05%, Reddit – 7.85%, லின்க்டுஇன் – 7.78%, ட்விச் – 5.11%, டிக்டாக் – 2.82%, Pinterest – 2.81%, Discord – 2.58% பயனர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நீங்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளம் எது?
இந்திய மக்கள் தொகையில் 29% பேர் சைவ பிரியர்கள் என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக, ராஜஸ்தான் மாநிலத்தில் 75% பேர் சைவ பிரியர்கள் என்றும், அதற்கடுத்து, அதிகபட்சமாக ஹரியானாவில் 70% பேர் சைவ பிரியர்கள் என்றும், 3ஆவது அதிகபட்சமாக பஞ்சாப்பில் 67% பேர் சைவ பிரியர்கள் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேற்கு மாநிலங்களில் சைவ பிரியர்கள் அதிகம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தொடர்பாக மணிசங்கர் ஐயர் கூறிய கருத்தை ஆதரிக்கவில்லை என காங்கிரஸ்
கட்சி விளக்கமளித்துள்ளது. மணி சங்கர் ஐயரின் சொந்த கருத்துக்கு, காங்கிரஸ் பொறுப்பேற்க முடியாது என்றும் அக்கட்சி கூறியுள்ளது. பாகிஸ்தான் உடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அவர்களிடம் அணு ஆயுதம் இருப்பதை இந்தியா எப்போதும் மறக்கக்கூடாது எனவும் மணி சங்கர் ஐயர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிணங்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் டிரைவராக ‘களவாணி’ விமல் நடித்துள்ள ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு இறந்துபோன ஒருவரின் பிணத்தை வேனில் ஏற்றிச் செல்லும்போது, ஏற்படும் பிரச்னைகளைச் சமாளித்து, விமல் எப்படி மீள்கிறார் என்பது தான் கதைக்களமாம். இந்த படத்தில் கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் அளித்திருப்பதை வரவேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அநீதிக்கு எதிராக கிடைத்த இந்த வெற்றி, நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை நீதியை அடையாளப்படுத்துவது மட்டுமின்றி, இந்தியா கூட்டமைப்பையும் பலப்படுத்துகிறது, இது தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வேகத்தை அதிகரிக்கிறது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.