News November 7, 2025

‘ஒவ்வொருவருக்கும் ₹5,000 கொடுக்க திமுக திட்டம்’

image

ஒவ்வொரு ஓட்டுக்கும் ₹5,000 கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும், ₹50,000 கொடுத்தாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றும் RB உதயகுமார் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள SIR-ல் எந்த குழப்பமும் இல்லை. ஆனால், அதில், திமுக முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், SIR படிவங்களை திமுகவினர் பெற ஆர்வம் காட்டுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News November 7, 2025

ராஜமெளலி படத்தின் வில்லனோட FIRST LOOK

image

பாகுபலி, RRR வெற்றியை தொடர்ந்து ₹1000 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்து வருகிறார் SS ராஜமெளலி. மகேஷ் பாபு ஹீரோவாகவும், பிரியங்கா சோப்ரா ஹீரோயினாகவும் நடிக்கும் இந்த படத்தில், பிருத்விராஜ் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில், அவரது FIRST LOOK-ஐ வெளியிட்டுள்ளார் ராஜமெளலி. கொஞ்சம் எக்ஸ்மென், கொஞ்சம் ஆக்டோபஸ், கொஞ்சம் ஆத்ரேயாவை மிக்ஸ் செய்தது போல உள்ள இந்த கேரக்டருக்கு பெயர் கும்பா என வைத்துள்ளனர்.

News November 7, 2025

படிக்க ₹50,000 Scholarship கொடுக்கும் திட்டம்

image

தொழில்நுட்ப பட்டப்படிப்பு & டிப்ளமோ பயிலும் மாணவிகளுக்கு ஏஐசிடிஇ பிரகதி உதவித்தொகை திட்டம் ஆண்டுக்கு ₹50,000 உதவித்தொகை வழங்குகிறது. இதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது. இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் மாணவி, வேற எந்தவொரு உதவித்தொகையும் பெறக்கூடாது. இத்திட்டத்தில் பயன்பெற <>NPS போர்ட்டலில்<<>> விண்ணப்பியுங்கள். பெண்கள் படிப்புக்கு யூஸ் ஆகும் SHARE THIS.

News November 7, 2025

உலகை மாற்றப்போகும் 6 கண்டுபிடிப்புகள்!

image

காற்று மாசுபாடு, பிளாஸ்டிக், அதிக கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் போன்றவற்றால், பூமி தவித்து வருகிறது. இப்படியே சென்றால், வருங்கால சந்ததியினருக்கு நாம் பூமியை கொடுக்க மாட்டோம். வாழும் நரகத்தை தருவோம் எனலாம். அதனை மாற்றி, பூமியை காப்பாற்றும் முயற்சியில் முக்கியமான 6 கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe பண்ணுங்க.

News November 7, 2025

திமுக ஆட்சியில் மகளிர் பாதுகாப்பில் Compromise: இபிஎஸ்

image

கோவையில் பெண் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை, சென்னையில் மாணவி மாயம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு முற்றிலுமாக Compromise ஆகியிருப்பதாக EPS கண்டனம் தெரிவித்துள்ளார். எந்த நேரத்திலும் பெண்களால் பாதுகாப்பாக இருக்க முடியாத நிலையை உருவாக்கிவிட்டு, இது பெண்களுக்கான அரசு என்று கூறும் ஸ்டாலின், அதற்கு கூச்சப்பட வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

News November 7, 2025

நீங்க அடிக்கடி Chest X-ray எடுக்குறீங்களா?

image

Full body check up செய்யும் போது, பலரும் Chest X-ray எடுப்பார்கள். ஆனால், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள், இதனை செய்ய வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அடிக்கடி இந்த Chest X-ray எடுப்பதால், கதிர்வீச்சுக்கு ஆளாகலாம் என எச்சரிக்கின்றனர். இதனால் இருமல், காய்ச்சல், TB போன்ற பிரச்னைகள் வரும் அபாயம் உள்ளதாம். எனவே, டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே, இந்த Chest X-ray எடுப்பது சிறந்தது.

News November 7, 2025

BREAKING: தவெக சின்னம்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு

image

தவெகவுக்கு பொது சின்னம் ஒதுக்குவது தொடர்பாக ECI-யை நாட விஜய் முடிவெடுத்துள்ளார். இதற்காக ஆதவ் அர்ஜுனா இன்று டெல்லி செல்ல உள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விசில், கிரிக்கெட் பேட், கப்பல், ஆட்டோ ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தவெக ECI-ல் மனு அளிக்க உள்ளது. இதில் தவெகவுக்கு ஏற்ற சின்னம் எது? உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.

News November 7, 2025

நிலைப்பாட்டை மாற்றிய EPS: செங்கோட்டையன்

image

தனது நிலைப்பாட்டை தொடர்ந்து மாற்றியவர் EPS என செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆட்சியை நடத்த தடுமாறியபோது OPS-ஐ அழைத்து வந்த EPS-தான், தற்போது அவரை கட்சியில் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார் எனவும், தான் CM-ஆக வழிவகை செய்த சசிகலாவையே கொச்சையாக பேசினார் என்றும் விமர்சித்துள்ளார். MP தேர்தலில் உழைத்தவர்களுக்கு சீட் கொடுக்காமல் பணம் செலவழிப்பவர்களுக்கே EPS சீட் வழங்கினார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News November 7, 2025

தெருநாய்கள் வழக்கு: அரசுக்கு கெடுபிடி! 1/2

image

*உள்ளாட்சி அமைப்புகள் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது சோதனை செய்ய வேண்டும் *பிடித்த தெருநாய்களை மீண்டும் அதே இடத்தில் விடக்கூடாது *சாலைகளில் திரியும் விலங்குகளை அகற்ற நெடுஞ்சாலை ரோந்து குழுவை அமைக்க உத்தரவு *அனைத்து மாநில அரசுகளும் இதை உறுதியாக கடைபிடித்து, 8 வாரங்களுக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

News November 7, 2025

தெருநாய்கள் வழக்கு: SC-ன் உத்தரவுகள் இதோ! 2/2

image

தெருநாய்கள் வழக்குகளை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. *பள்ளி, கல்லூரிகள், ஹாஸ்பிடல் பகுதிகளுக்குள் தெருநாய்கள் நுழைவதை தடுப்பதை உறுதி செய்ய வேண்டும் *அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன பகுதிகளுக்குள்ளும் நாய்கள் நுழைவதை தடுக்க வேண்டும் *மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் ஆணை *இதை ஒரு அதிகாரியை நியமித்து கண்காணிக்க உத்தரவு.

error: Content is protected !!