India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம், ED-யிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 2022இல் பதிவான இந்த வழக்கில், 2 ஆண்டுகள் வரை அமைதியாக இருந்த அமலாக்கத்துறை, தேர்தல் அறிவிப்பு வந்த உடனே கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பியது. மேலும், தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தலுக்கு பின்போ கெஜ்ரிவாலை கைது செய்திருக்கலாமே என்றும் நீதிமன்றம் வினவியுள்ளது.
நாகலாந்தில், இந்தியாவின் முதல் உருளைக் கிழங்கு திருவிழா தொடங்கியுள்ளது. இம்மாநிலத்தில் உள்ள 70% மக்கள் உருளைக்கிழங்கு சாகுபடி செய்து வருகிறார்கள். விவசாயிகளின் உழைப்பை அங்கீகரிக்கவும், ஆர்கானிக் உருளைக்கிழங்கு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில், விவசாயிகள் தாங்கள்
விளைவித்த உருளையை விற்பனை செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, கரூர், பெரம்பலூர், நாமக்கல், குமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரத்தில் மழை பெய்யக் கூடும். சில இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
CSK-வுக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 59ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6இல் வென்றுள்ள சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதேபோல, 11 போட்டியில் ஆடி, 4 போட்டிகளில் மட்டுமே வென்ற குஜராத், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
சத்தீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜப்பூர் மாவட்டம் கங்கலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும், அவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில், இதுவரை 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சண்டை தொடர்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
லக்னோ அணி உரிமையாளர் கோயங்காவின் நடவடிக்கையை அவமானகரமானது என முகமது ஷமி விமர்சித்துள்ளார். ஹைதராபாத் அணியிடம் லக்னோ தோல்வி அடைந்த நிலையில், மைதானத்தில் கேப்டன் கே.எல்.ராகுலிடம் தோல்வி குறித்து கோயங்கா ஆவேசமாக பேசினார். இது குறித்து பேசிய ஷமி, அணியின் உரிமையாளர் என்பவர் பிறருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமே தவிர, அடுத்தவர்கள் விமர்சிக்கும் அளவுக்கு நடந்து கொள்ள கூடாது எனக் கூறியுள்ளார்.
நாய்களிடம் கடிபடாமல் தப்பிப்பது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் சில யோசனைகளை தெரிவித்துள்ளனர். அதை தெரிந்து கொள்வோம் 1) நாய் துரத்தும்போது ஓடாதீர்கள் 2) நாய் உங்களை பார்க்கும்போது, அதன் கண்ணை நேராக பார்க்காதீர்கள். நமது பலவீனத்தை புரிந்து கொண்டு, உடனடியாக கடிக்க தொடங்கி விடும் 3) நாய் நெருங்கும்போது, அச்சப்படாமல் நிமிர்ந்து நில்லுங்கள். நீங்கள் பயப்படவில்லை என்பதை உணர்ந்து விலகிவிடும்.
இந்து மதத்தினருக்கு எதிரானது காங்கிரஸ் என்று மோடி சாடியுள்ளார். தெலங்கானா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, இந்துக்களுக்கு எதிரான மனப்பாங்கு கொண்ட காங்கிரஸ் கட்சி, இந்துக்களையும் இந்துமத விழாக்களையும் வெறுக்கிறது என்றும் விமர்சித்தார். இந்துக்களை 2ம் தர குடிமக்களாக்க காங்கிரஸ் விரும்புவதாகவும், இதற்காகத்தான் வாக்கு ஜிகாத் குறித்து அக்கட்சி பேசுவதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கோடை மழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து வெயில் சுட்டெரிக்கும் சூழலில், சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருச்சி, ஈரோடு, நாகை, சிவகங்கை, சேலம், குமரி, தென்காசி, மதுரை, நாமக்கல், கோவை உள்பட 17 மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
2024இல் இதுவரை வெளியான 80 தமிழ் திரைப்படங்களில் 70 படங்கள் தோல்வி அடைந்துள்ளதாக தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தமிழ்ப் படங்களின் கதைகள் தரமில்லாமல் இருப்பதே இந்த தோல்விகளுக்கு காரணம். மஞ்சுமெல் பாய்ஸ் போன்ற நல்ல படங்களை தமிழ் ரசிகர்கள் கொண்டாடியதை நாம் மறுக்க முடியாது. நிலைமை மேலும் மோசம் அடைவதற்குள் தமிழ் திரையுலகம் விழித்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.