India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CSK அணிக்கு எதிரான 59ஆவது லீக் போட்டியில், GT அணியின் கேப்டன் ஸுப்மன் கில், சாய் சுதர்ஷன் ஆகிய இருவரும் அதிரடி ஆடிவருகின்றனர். CSK அணி பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து களமிறங்கிய GT அணியின் கேப்டன் சுப்மன் கில்லுடன் கைகோர்த்து ஆடிவரும் சாய் சுதர்ஷன், 32 பந்துகளில் 59 ரன்களை எடுத்து அந்த அணியின் ரன் ரேட்டிங்கை உயர்த்தி வருகிறார். சுப்மன் கில் 26 பந்துகளில் 3 சிக்ஸருடன் 56 ரன்களை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாத பட்ஜெட்டில் துண்டு விழுவதாக வேதனை தெரிவித்துள்ள பெண்கள், விலை உயர்வை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது மோடியின் இந்தியா இல்லை, மகாத்மா காந்தியின் இந்தியா என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் உள்ள இந்துக்கள், முஸ்லிம்களை பாஜக பிரிக்க விரும்புவதாக குற்றம்சாட்டினார். ஆனால், பாஜகவின் இந்த முயற்சி பலிக்காது என்றும், ஏனெனில், இது மோடியின் இந்தியா இல்லை, மகாத்மா காந்தி, நேரு, ராஜேந்திர பிரசாத்தின் இந்தியா என்றார்.
DC அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது கடைசியாக 2019 நவம்பரில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு எங்கிருக்கிறார் என அடையாளம் தெரியாமல் போன அவர், தற்போது உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இது குறித்து பேசிய அவர், “நல்ல நாள்கள் வரும் என்ற நம்பிக்கையோடும் இருந்தேன். நாட்டுக்காக விளையாட முடியாத ஒவ்வொரு நாளும் எனக்குப் போராட்டமாகவே இருந்தது” எனக் கூறியுள்ளார்.
காங்கிரஸுடன் இணைந்து அழிந்து போவதற்கு பதிலாக அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்து கொள்ளலாம் என பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார். நந்தூர்பார் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ், சிவசேனை ஆகியவற்றின் இரு ‘நகல்’ கட்சிகளின் தலைமைகளும், அடுத்த சில ஆண்டுகள் காங்கிரஸுடன் நெருக்கமாக இருக்கும் அல்லது இணைந்துவிடும்” என்று தெரிவித்தார்.
தேர்ச்சி விகிதம் குறைந்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை., துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை., இணைப்பில் 400க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதில், 56 கல்லூரிகளில் 20%க்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றனர். 2 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை.
கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும், கன்றும் தற்செயலாக அரளி பூவை தின்று உயிரிழந்தது. இதனால், அரளி பூவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.
மலையாள நடிகை சம்யுக்தா மேனன் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த அனுபவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மலையாளப் படங்களில் நடிப்பது எளிதானது எனக் கூறிய சம்யுக்தா, மொழி தெரியாத தெலுங்குப் படங்களில் நடிப்பது மிகவும் கடினம் என்றார். அத்துடன், தெலுங்கு படங்களில் அதிகளவில் மேக்கப் போடுவார்கள் என்பதால், அடிக்கடி டச் அப் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காக்க ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். திகார் சிறையில் இருந்து வெளி வந்த அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, தொண்டர்களிடையே பேசிய கெஜ்ரிவால், தனக்காக பிரார்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தன்னை இடைக்கால ஜாமினில் விடுவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் அவர் நன்றி கூறினார்.
WFI முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய தேவையான ஆதாரமுள்ளதாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என பிரிஜ் பூஷண் கோரி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் மீது ஐபிசி 354 & 354 ஏ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.