India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*மேஷம் – உகந்த நாள்
*ரிஷபம் – மந்தமான நிலை காணப்படும்
*மிதுனம் – குழப்பம் உண்டாகும்
*கடகம் – உணர்ச்சிவசப் படக்கூடாது
*சிம்மம் – சாதகமான நாள்
*கன்னி – கவனமாக இருக்க வேண்டும்
*துலாம் – சிறப்பான நாள்
*விருச்சிகம் – கடவுள் வழிபாடு தேவை
*தனுசு – வெற்றி உண்டாகும்
*மகரம் – முக்கிய முடிவு எடுக்கலாம் *கும்பம் – பிரச்னை ஏற்படும் *மீனம் – சிக்கலான நாள்
IPL தொடரில் 25 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை கடந்து, சச்சின் டெண்டுல்கர் சாதனையை குஜராத் வீரர் சாய் சுதர்சன் முறியடித்துள்ளார். இதற்கு முன்பு, 31 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 1,000 ரன்களை சச்சின் டெண்டுல்கர் விளாசியது சாதனையாக இருந்தது. அதை இன்று சுதர்சன் முறியடித்தார். சிஎஸ்கேவுக்கு எதிரான இன்றைய போட்டியில் 103 ரன்களை குவித்து, 1,000 ரன்களை சுதர்சன் கடந்தார். இது அவரின் 25ஆவது இன்னிங்ஸ் ஆகும்.
*ஏப்., 24: பணமோசடி வழக்கில் கெஜ்ரிவால் முக்கிய குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்தது. *ஏப்., 29: ED வாக்குமூலத்தை பதிவு செய்யாதது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. *மே 3: தேர்தலை கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. * மே 10 : 50 நாள்களுக்கு பிறகு கெஜ்ரிவாலுக்கு (ஜூன் 1 வரை) இடைக்கால ஜாமின் அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இரவு 10 முதல் 1 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும், இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
*பிப்., 7, 2024: ED அளித்த புதிய புகாரின்பேரில், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. *மார்ச் 21, 2024: கெஜ்ரிவாலை ED கைது செய்தது. *ஏப்., 9, 2024: EDஇன் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மார்ச் 23 ஆம் தேதி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. *10 ஏப்., 2024: ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.
*நவ., 2021: டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. *ஜூலை 2022: டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா முறைகேடுகள் நடந்துள்ளதா என ஆராய CBI விசாரணைக்கு பரிந்துரைத்தார்.*ஆக., 2022: முறைகேடுகள் தொடர்பாக CBI & ED வழக்குகளைப் பதிவு செய்தன.* செப் 2022: டெல்லி அரசு மதுபானக் கொள்கையை ரத்து செய்தது. *அக்., 2023 – ஜன., 2024: விசாரணைக்கு ஆஜராகும்படி, ED கெஜ்ரிவாலுக்கு 5 சம்மன்களை அனுப்பியது.
குஜராத்துக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வருகின்றனர். 232 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 1 ரன்னில் அவுட் ஆனார்கள். அதனை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கெய்க்வாட் டக் அவுட் ஆனார். 4 ஓவர் முடிவில் சென்னை, 3 விக்கெட் இழந்து 22 ரன் எடுத்துள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்?
20 லட்சம் மொபைல் எண்களை மீண்டும் சரிபார்க்க தொலைத் தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டுள்ளது. சைபர் குற்றங்களுக்கு 28,200 செல்ஃபோன்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக காவல்துறை அளித்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு, DoT ஆய்வு செய்தது. அதில் அந்த செல்ஃபோன்களில் 20 லட்சம் எண்கள் பயன்படுத்தப்பட்டது தெரிந்ததால், செல்போன்களை முடக்கவும், அந்த எண்களை மீண்டும் சரிபார்க்கவும் DoT உத்தரவிட்டது.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் ஆபரணத் தங்கத்தின் விலை ₹85,000 வரை உயரலாம் என்று கமாடிட்டி சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். இங்கிலாந்து மத்திய வங்கி, வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பதால் அமெரிக்க டாலரின் விலையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. டாலர் விலை வீழ்ச்சி, உள்நாட்டு தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கரன்சி சந்தையில் லாப முன்பதிவு தூண்டப்பட்டு, தங்கம் விலை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் இந்திய மல்யுத்த சம்மேளன கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷணுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம் என அவர் மீது குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தங்களின் நீண்ட போராட்டத்தால் பிரிஜ்பூஷண் மீது நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து இருப்பதாகவும், இதை வரவேற்பதாகவும் கூறினார்.
Sorry, no posts matched your criteria.