News May 11, 2024

தென்கிழக்கு ஆசியாவிற்கு இந்தியா தலைமை தாங்கும்

image

தென்கிழக்கு ஆசியாவிற்கு தலைமை தாங்கும் நாடாக இந்தியா இருக்க வேண்டுமென தான் விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “இந்தியா வளர்ச்சி அடைந்தால் உலகத்தின் பாரம் குறையும். நமது வளர்ச்சி யாருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது. உலகின் அனைத்து நாடுகளையும் ஈர்க்கக் கூடிய இடமாக கொல்கத்தாவை மாற்ற வேண்டும். உலக நாடுகள் நம்முடன் சேர விரும்ப வேண்டும்” என்றார்.

News May 11, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News May 11, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News May 11, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

* இன்று வெளியான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றனர்.
* சிஎஸ்கேவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கில், சாய் சுதர்சன் சதம் அடித்து சாதனை.
* டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது.
* அட்சய திரிதியை முன்னிட்டு இன்று தங்கம் விலையில் 3 முறை மாற்றம் செய்யப்பட்டது.

News May 11, 2024

₹4,886 கோடி நிகர லாபம் ஈட்டிய பரோடா வங்கி

image

2023-24 Q4 காலாண்டில், பேங்க் ஆஃப் பரோடா
₹4,886 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் இதே காலகட்டத்தில், ₹4,775 கோடியாக இருந்த நிகர லாபம் தற்போது 2.3 % உயர்ந்துள்ளது. அதேபோல், இந்த காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருமானம் ₹11,525 கோடியில் இருந்து ₹11,793 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த உள்நாட்டு வைப்புத்தொகை 7.7% வளர்ச்சியடைந்து, ₹11.28 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

News May 11, 2024

செரிமானப் பிரச்னைகளை தீர்க்கும் நெல்லிக்காய்

image

நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. நெல்லிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது செரிமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் தருவதோடு, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும், நெல்லிக்காய் வைட்டமின் சி இன் அதிசிறந்த ஆதாரமாக உள்ளதால், வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்கள் உணவில் தினமும் நெல்லிக்காயை சேர்த்துக் கொள்ளலாம்.

News May 11, 2024

அரசியல் சட்டத்தை காங்கிரஸ் தான் மாற்றியுள்ளது

image

காங்கிரஸ் இதுவரை 80 முறை அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காங்கிரஸின் தவறான பொருளாதார கொள்கைகளால் இந்தியாவில் மக்கள் ஏழைகளாகவே இருப்பதாக தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நலன் மீது எப்போதும் அக்கறை இருந்ததில்லை என்றார். பல முறை அரசியல் சட்டத்தை மாற்றிய காங்கிரஸ், பாஜகவை குற்றம் சாட்டுவதை யாரும் ஏற்க போவதில்லை என்றும் கூறினார்.

News May 11, 2024

IPL: சென்னை அணி தோல்வி

image

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த GT 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய CSK அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். மிச்செல் 63, மொயின் அலி 56, டூபே 21, தோனி 26* ரன்கள் அடித்தனர். கடைசியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 196/8 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

News May 10, 2024

குறைந்த தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்

image

காங்கிரஸ் கட்சி கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக 400 தொகுதிகளுக்கு குறைவாக போட்டியிடுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் 326 இடங்களில் மட்டுமே அக்கட்சி போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி உடன்பாடு காரணமாக, காங்கிரஸ் போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2019, 2014, 2009, 2004 தேர்தல்களில் முறையே 421, 464, 440, 417 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

அரை சதம் விளாசிய மிட்செல், மொய்ன் அலி

image

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சென்னை வீரர்கள் மிட்செல், மொய்ன் அலி அரை சதம் கடந்தனர். அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், CSK அணி 232 ரன்கள் இலக்கை துரத்தி வருகிறது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய மிட்செல் 62 (34) ரன்களில் ஆட்டமிழந்தார். மொய்ன் அலி 50 (31) ரன்கள் எடுத்துள்ளார். CSK அணி தற்போது வரை 13 ஒவர்களில் 125/4 ரன்களுடன் ஆடி வருகிறது.

error: Content is protected !!