India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மகாராஜா’ திரைப்படம், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ள இப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும், நிகில் நாகேஷின் ‘கில்’ (இந்தி), ப்ரீத்தி பாணிக்ரஹியின் ‘கேர்ள் வில் பி கேர்ள்ஸ்’ (Girls Will Be Girls) ஆகியப் படங்கள் திரையிடப்பட உள்ளன.
ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்துகிறார். உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த அவர் இன்று முதல் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபடவுள்ளார். இதனால், தற்போதைய அரசியல் நிலவரம், தேர்தல் பிரசார உத்திகள், பாஜகவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுதேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மன உறுதியோடும், தன்னம்பிக்கையோடும் உடனடித் தேர்வுகளை தவறாமல் எழுதி வெற்றிபெற வேண்டும். இப்போதில் இருந்தே படித்தால் கண்டிப்பாக ஜூலை 2ஆம் தேதி நடைபெறும் மறுதேர்வில் வெற்றிபெற்று அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் நடை போடுங்கள்.
சென்னை உட்பட 13 முக்கிய நகரங்களில் ஆண்டுக்கு 16% வரை வீட்டு வாடகை அதிகரிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக நொய்டா, பெங்களூர் போன்ற நகரங்களில் அதிகபட்சமாக 25 முதல் 35% வரை வீட்டு வாடகை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வாடகை வீடு தேடுபவர்கள் ₹10,000 முதல் ₹30,000 வாடகையிலேயே அதிகம் வீடு தேடுவதாகவும், அதனால் இந்த வாடகையில் உள்ள வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
CSK-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், GT கேப்டன் ஷுப்மன் கில் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். சாய் சுதர்ஷனுடன் சேர்ந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 9 Four, 6 Six என விளாசி அசத்தினார். 55 பந்துகளுக்கு 104 ரன்கள் குவித்த அவர், தனது 4ஆவது ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். இதனால் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் குஜராத் அணி ப்ளே-ஆப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
திருவள்ளூர், பொதட்டூர்பேட்டையை சேர்ந்த குமாரி என்ற மாணவி, 10ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் குடித்து மயங்கி விழுந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
GT-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் CSK 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதுகுறித்துப் பேசிய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், குஜராத்துக்கு கூடுதலாக 15 ரன்கள் கொடுத்துவிட்டதாகவும், திட்டமிட்டு செயல்பட்டபோதும் ஃபீல்டிங்கில் சொதப்பிவிட்டதாகவும் கூறினார். மேலும், GT பேட்டிங் நன்றாக இருந்ததாகவும், பேட்டர்கள் அடித்து விளையாடும்போது நம்மால் கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தலுக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 96 தொகுதிகளில் இன்று மாலையுடன் பரப்புரை நிறைவு பெறுகிறது. மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆந்திரா 25, தெலங்கானா 17, உ.பி 13, மகாராஷ்டிரா 11, ம.பி 8, மே.வ 8, ஜார்க்கண்ட் 4, ஒடிசா 4, பிஹார் 5, ஜம்மு 1 தொகுதியிலும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில் ஜெகன் மோகனின் தங்கை ஷர்மிளா, ஓவைசி உள்பட முக்கிய வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
Redpix யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு Redpix-இல் பேட்டி அளித்ததே மூல காரணம். இதைத்தொடர்ந்து, பெலிக்ஸ் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு விசாரணையின்போது, நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களை கூற தூண்டும் வகையில் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க நீதிபதி கூறியிருந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகாசி அருகே நாரணாபுரம்புதூரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயன மூலப்பொருள் சேமித்து வைத்திருந்த கிடங்கு வெடித்துச் சிதறியதில், 3 அறைகள் தரைமட்டமானது. அதிகாலையில் தொழிலாளர்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கீழதிருத்தங்கலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த 2 நாட்களில், மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.